வி.சி.க உடன் மறைமுகமாக கூட்டணி பேசும் விஜய் கட்சி!… நடக்குமா?

0
73

நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை உருவாக்கிய அதனுடைய தலைவராக உள்ளார். பொதுச் செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஸ்ஸி ஆனந்த் ஆனந்த் அவர்கள் உள்ளார். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் அவர்களை முதலமைச்சர் ஆக்குவதே தங்கள் குறிக்கோள் என விஜய் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகம் நடிகர் விஜய் அவர்களின் தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் தற்போது வரை கூட்டணி குறித்து யாருடன் பேசவில்லையே என்றும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் நடிகர் விஜய் அவர்கள் கூட்டணியில் தொல்.திருமாவளவன் அவர்களின் விடுதலைச் சிறுத்தை கட்சியை தன்னுடன் கூட்டணியில் இணைத்துக் கொள்ள திட்டமிடுவதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான வேலைகளிலும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி முறித்துக் கொண்டு விசிக- த.வெ.க உடன் கூட்டணி அமைக்கும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here