GOAT படத்தை பார்த்த பின் விஜய் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?

0
128

தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் GOAT. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க AGS நிறுவனம் தயாரித்துள்ளது. இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா மற்றும் மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதுவரை இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளிவந்து மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியான கிலிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்த நிலையில், அடுத்ததாக எல்லோரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 3 வது பாடல் விரைவில் வெளிவரவுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி GOAT படம் வெளிவரவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியிட்டு விழா ஆகஸ்ட் 3 வது வாரத்தில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிப்பை தெறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் கூறிய விமர்சனம்

இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் இடையே பெரிதளவில் இருக்க, படத்தை பற்றிய விமர்சனம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. GOAT படத்தின் முதல் பாதியை அண்மையில் படத்தின் ஹீரோ தளபதி விஜய் பார்த்துவிட்டாராம். படத்தை பார்த்த பிறகு அவர் சொன்ன வார்த்தை ‘படம் தெறிக்குது’ என சொல்லியுள்ளாராம். இதன் மூலம் இந்த படம் வேற லெவலில் வந்துள்ளது என கூறி வருகிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here