காம யுகமான மலையாள திரை உலகம் : தமிழ் சினிமாவில் சிக்கப் போகும் பிரபலங்கள் யார்?..

0
135

மலையாள திரையுலகை தொடர்ந்து, பெண் நடிகைகளுக்கு ஏற்படும் மீ-டூ பிரச்னை தற்போது தமிழ் சினிமாவிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மலையாள திரையுலகம் தற்போது காம உலகமாக மாறியுள்ளது. தொடர்ந்து அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

ஹேமா கமிஷன் ரிப்போர்ட்’டால் மல்லுவுட் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் தங்களுக்கு என்ன நடந்தது; அது யாரால் நடந்தது என வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். மலையாளத் திரைப்பட சங்க தலைவர் பொறுப்பிலிருந்து மோகன் லால் உள்ளிட்ட பல நடிகர்கள் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உள்ளது.

 மீ-டூ குற்றம் சாட்டப்பட்ட நடிகர் முகேஷ் வீட்டுக்கு முன் அவருடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி மகிளா காங்கிரஸார் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவிலும் சக நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டும் உள்ளது. இது நடிகைகளுக்கு மட்டும் இல்லாமல் பெண் மேக்கப் ஆர்டிஸ்ட், பெண் நடன கலைஞர்கள் என சினிமாவில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பல பெண்களுக்கு நாளுக்கு நாள் பாலியல் தொந்தரவுகள், நெருக்கடிகள் அதிகரித்து வருவதாக பல முன்னணி நடிகைகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இருப்பினும் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் கேட்ட இயக்குநர்களின் பெயர்களோ!.. நடிகர்களின் பெயர்களோ!.. எந்த நடிகையும் இதுவரை வெளிப்படையாக சொன்னதில்லை விரைவில் மலையாள சினிமா துறை போன்று தமிழ் சினிமாவில் நடப்பது விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here