நடிகை அசின் கணவர் உருக்கமான தகவல் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.
நடிகை அசின்
போக்கிரி, சிவகாசி, தசாவதாரம் என தமிழில் பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை அசின். ஹிந்தியில் ரெடி, கிலாடி 786 மற்றும் ஹவுஸ்ஃபுல் 2 போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

2016ல், மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகினார். அவர்களுக்கு 2017ல் பெண் குழந்தை பிறந்தது. அவருடைய பெயர் ஆரின். அவ்வப்போது தனது மகளை பற்றிய வீடியோ காட்சிகளை பகிர்ந்து வருவார்.
கணவர் தகவல்
இந்நிலையில் ஷிகர் தவானின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் சர்மா, என் மகள் பிறக்கும் நேரத்தில் அக்ஷய் குமார் எனக்கு அடிக்கடி போன் செய்து குழந்தை பிறந்ததும் சொல்லுங்கள் என கூறினார். கண்டிப்பாக சொல்கிறேன் என்று சொன்னேன்.குழந்தை பிறந்த உடன் அவருக்கு தான் முதலில் போன் செய்தேன்.

பிரதர் குட் நியூஸ் என்றேன்உடனே அவர் ஃபென்டாஸ்டிக் என்றார். அசினுக்கு குழந்தை பிறந்ததும் கொச்சிக்கு வருவதற்கு விமானத்தை தயாராக வைத்திருந்தார் அக்ஷய் குமார். என் குடும்பத்தார் வந்து சேருவதற்கு முன்பே அக்ஷய் வந்துவிட்டார்.
அதை நான் என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன். என் வாழ்க்கையில் ஏதாவது பெரிதாக செய்வதாக இருந்தால் நீங்கள் என் பக்கத்திலேயே இருக்கிறீர்கள் என்ற தைரியத்தில் செய்வேன் என்றார் என உருக்கமாக தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், ராகுல் சர்மாவும், அசினும் டைவர்ஸ் பெறப் போவதாக செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here