Chutney Sambar Trailer: சூரி ஹீரோவாக அவதாரம் எடுத்த பிறகு தற்போது யோகி பாபு கைவசம் பல படங்கள் குவிய தொடங்கியுள்ளது. கதையின் ஹீரோவாக இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் நகைச்சுவையையும் விடாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்.
அதன்படி கோட், கங்குவா மற்றும் அந்தகன் என இவர் காமெடியில் தூள் கிளம்பியுள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஐசரி கணேஷ் production னில் யோகி பாபு நடித்துள்ள சட்னி சாம்பார் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

ராதா மோகன் இயக்கி உள்ள இந்த வெப் சீரிஸ் வரும் 26 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகிறது. காமெடி அலப்பறையாக உருவாகி இருக்கும் இந்த தொடரில் வாணி போஜன், கயல் சந்திரன், நித்தின் சத்யா, மைனா நந்தினி மற்றும் நிழல்கள் ரவி போன்ற பலர் நடித்துள்ளனர்.
வெளியானது சட்னி சாம்பார் ட்ரெய்லர்
ட்ரெய்லரின் துவக்கத்திலேயே ஊட்டியில் பிரபலமான அமுதா கஃபே காட்டப்படுகிறது. அதை அடுத்து அப்பாவின் விருப்பத்திற்காக கயல் சந்திரன் யோகி பாபுவை தேடி வருகிறார். தள்ளு வண்டியில் டிபன் கடையை நடத்திகொண்டுள்ள இவரது கடையின் பெயரும் அமுதா உணவகம் தான்.
அதை அடுத்து அவரை ஊட்டிக்கு அழைத்து போகும் கயல் சந்திரன் தன் அப்பாவை சந்திக்க வைக்கிறார்.அப்போது யோகி பாபுவின் அம்மா தான் கயல் சந்திரன் அப்பாவின் முன்னாள் காதலி என்பதும் தெரிய வருகிறது.
இதனால் வரக்கூடிய குழப்பத்தை நகைச்சுவையாக சொல்லி இருக்கின்றனர். இப்படியாக வெளி வந்திருக்கும் இந்த ட்ரெய்லர் தற்போது அதிக கவனம் பெற்றிருக்கிறது. அதில் யோகி பாபுவின் வழக்கமான மக்கள் வசனங்களும் ரசிக்கும்படி வைத்துள்ளது.
யோகி பாபுவின் சட்னி சாம்பார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here