பெற்றோர்கள் கடைபிடிக்க கூடிய 10 தீர்மானங்கள்

0
169
10 resolutions parents can follow
10 resolutions parents can follow

10 resolutions parents can follow : பெற்றோர்கள் கடைப்பிடிக்க கூடிய 10 தீர்மானங்களைப் குறித்து தான் பார்க்கப் போறோம்.

10 தீர்மானங்கள் | 10 resolutions parents can follow

10 resolutions parents can follow
10 resolutions parents can follow

இரவு உணவு ஒவ்வொரு வாரமாவது குடும்பத்தோட சாப்பிடுங்க

வாரத்துக்கு ஒருமுறை குடும்ப night உணவினை திட்டமிடுங்கள். வாரத்தின் 1 நாளாவது குடும்பத்தோடு ஒன்றாக இரவு food சாப்பிடுவதற்கு முன்னுரிமை தரவும். உங்க குடும்ப உறுப்பினரிடம் எந்த கிழமை எந்த நேரத்துல சாப்பிடலாம் என்று கலந்துரையாடிஅந்த கிழமையும் நேரத்தையும் முடிவு செய்து அதன் பிறகு அது போல வாரம் வாரம் கடைப்பிடிக்க வேண்டும்.

அனைவருக்கும் பிடித்தமான உணவைத் தேர்வு செய்யுங்க

உங்க குடும்பத்துல இருக்கும் அனைவரிடமும் குடும்ப இரவு food க்கு என்ன வகையான உணவு சாப்பிட போறீங்க அப்படின்னு கேளுங்க. அதன் பிறகு ஒருமுறை அவர்களிடம் அவர்கள் சாப்பிட விரும்பும் உணவை உறுதி படுத்தி கொள்ளவும்.

அதை ஒரு சந்தோஷமான அனுபவமாக மாற்றுக

ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதற்காக குடும்ப இரவு உணவை ஒரு நல்ல வேடிக்கையான நிகழ்ச்சியாக கூடப் பயன்படுத்தலாம். மேலும் ஒருத்தருக்கு ஒருத்தர் கதை சொல்லுங்க அல்லது விளையாடுங்க அல்லது ஒருவரையொருவர் பேசவைத்து அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உணவு செய்யும்போது அனைவரையும் உதவி செய்ய கூப்பிடுங்கள்

குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் உணவு சமைக்கும் போது உதவி செய்ய சொல்லுங்க. காய்கறி நறுக்குதல் உள்ளிட்ட ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் அவர்கள் உதவி செய்யக்கூடிய பணிகளைச் செய்யச் சொல்லுங்க.

அவர்களிடம் சிறிது நேரம் செலவிட்டு தெரிந்து கொள்ளுங்கள்

இது மாதிரி குடும்ப இரவு உணவுல ஒருவருக்கொருவர் அவருக்கென்ற வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை குறித்து பேசுவதற்கு சரியான நேரம் ஆகும். எனவே கேள்விகளைக் கேட்பதற்கு நேரத்தை ஒதுக்குங்க.

தொழில்நுட்பத்தினை பயன்படுத்தாதீர்கள்

கவனத்தை சிதற வைக்கும் மொபைல் போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்களை ஆஃப் செய்து வையுங்க, அப்படி ஆஃப் செய்வதால் இரவு குடும்ப உணவு உண்பதற்கு நல்ல சூழல் கிடைக்கும். இதனால் எந்த ஒரு தொந்தரவு இருக்காது. இதன் மூலம் எல்லோருக்கும் நிம்மதியான குடும்ப விருந்தாக அமையும்.

நீங்கள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குழந்தையுடனும் நேரத்தைச் செலவிடுங்க

உங்க குழந்தைகள் ஃப்ரீயா இருக்கிறபோது வாரத்தில் ஒரு நாள் அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். மாலை நேரத்துல அவர்ககளை அழைத்து கொண்டு நடைப்பயிற்சி செல்லலாம். நடைப்பயிற்சி செல்லும்போது அவர்களுடன் பேசிக்கொண்டு செல்வதால் அவர்களைப் பற்றி புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு குழந்தைகளும் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட கிழமை மற்றும் எந்த நேரத்தை ஒதுக்கி இருக்காங்க என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதைத் தினமும் அவர்களிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கொள்ளுங்க. இதை நீங்கத் தினமும் பார்க்கக்கூடிய இடத்துல எழுதிக் கூட வச்சுக்கலாம். உங்களுக்காக உங்க குழந்தைகள் ஒதுக்கப்பட்ட நேரம் வரும்போது உங்க குழந்தையுடன் நீங்க முழுமையா நேரத்தைச் செலவு செய்யுங்கள். மேலும் மொபைல் போன்களை ஆஃப் செய்துகொண்டு உங்க குழந்தைக்கு என்னென்ன பிடிக்கும், என்ன செய்ய விரும்புறாங்க என்பதை கேட்டுத் தெரிஞ்சுகொள்ளுங்க.

உங்க குழந்தைகளிடம் என்ன செய்யலாம் என்கின்ற தேர்ந்தெடுக்கின்ற சுதந்திரத்தை கொடுங்க. அதன் பிறகு அவர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து நேரத்தைச் செலசெய்யுங்கள். உங்கள் குழந்தை பத்து அல்லது பதினைந்து வயதிற்கு மேலே இருப்பவராக இருந்தால் நீங்கள் அவர்களுடன் ஒன்றாகசேர்ந்து செய்யக்கூடிய சில செயல்பாடுகளைப் பரிந்துரைத்து அதன்படி செய்யலாம்.

அந்தச் செயல்பாடானது உங்க குழந்தைகளுக்கு முதலில் புடிச்சிருக்கா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். அது ஒரு விளையாட்டாகக் கூட இருக்கலாம் அல்லது சமையல் செய்வதாகவும் இருக்கலாம். அல்லது பைக் ஓட்டுவதாகவும் இருக்கலாம் மற்றும் சைக்கிள் ஓட்டுவதாகக் கூட இருக்கலாம்.

கடைசியாக ஒருவரை ஒருவர் சில நல்ல நேர்மறையான கருத்தோடு அந்தச் செயலை முடிக்கலாம். அவங்க கூட நீங்க ஒன்றாக இருந்த நேரத்தை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களைப் பற்றிப் பெருமைப்பக்கூடிய விதமா அவர்களிடம் சொல்லுங்க.

தவறு செய்யட்டும் அதனிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்வார்கள்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தவறு செய்த அனுமதிக்க வேண்டும் அதன் பிறகுதான் அந்தத் தவறுகளிலிருந்துதான் அவங்க கற்றுக் கொள் வாங்க. தவறுகளைச் செய்வதும் அதிலிருந்து கற்றுக் கொள்வதும் குழந்தைகள் வளர்ந்தது சுதந்திரமா மாறுவதற்கு அது ஒரு முக்கிய அங்கமாகும். குழந்தைகள் தவறுகள் செய்தால் அது அவர்கள் செய்யக்கூடிய சொந்த செயல்களால் அந்தச் செயல்களின் விளைவுகளாலும் அவர்கள் நன்றாக புரிந்து கொள்ள கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும் மேலும் அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க மற்றும் முடிவெடுக்கவும் பயன்படும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆதரவு கொடுப்பதற்கும் வழிகாட்டுதலை கொடுப்பதற்கும் பக்கபலமாக இருக்கணும், ஆனா கடைசியில குழந்தைகள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டியது முக்கியம். ஆனால், மேலும் அவர்களின் தவறின் வரம்புகளை மீறாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

பெரிய மற்றும் சிறிய செயல்களை பற்றி அவர்களைப் பாராட்டுங்க

உங்க குழந்தைகளோட பெரிய மற்றும் சிறிய சாதனைகளை அங்கீகரித்து அவர்களை மிகவும் பாராட்டுவது அவசியம். அவர்களுடைய முயற்சிகள் எவ்வளவு சின்னதாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு அதில் அதிக முயற்சி மற்றும் வெற்றியை ஊக்குவிக்க வேண்டும். நீங்கள் அவர்களால் பெருமை கொள்கிறீர்கள் என்பதையும் நீங்கள் அவர்களை நம்புகிறீர்கள் என்பதையும் அவர்களிடம் தெரியப்படுத்த செய்யுங்கள். உங்கள் குழந்தைகளிடம் புன்னகை செய்து அவர்களை அரவணைத்து உங்களின் பாராட்டினை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவர்களுடை வெற்றியை கொண்டாடுங்க எவ்வளவு சிறிய சாதனை செய்து இருந்தாலும் நீங்க அவர்களை பற்றி பெருமை அடைகிறீர்கள் என்பதை பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

உங்க குழந்தைகளுடைய ஆர்வத்தை ஊக்குவியுங்கள்

உங்கள் குழந்தைகள் ஆர்வமாக அல்லது விரும்புகின்ற வகுப்பில் சேர அவர்களை ஊக்குவியுங்கள். இது அவர்களின் உண்மை திறன்களை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் திறன்களில் நம்பிக்கையைப் பெறவும் பயனாகும்.

உங்கள் குழந்தைகள் வெவ்வேறு செயல்பாடுகளில் முயற்சி செய்து அவர்கள் விருப்பத்தை தெரிந்து கொள்ளட்டும். மேலும் புதிய ஆர்வங்களை ஆராய்வதற்கும் அதில் ஆர்வமாக உள்ளதை கண்டறிவதற்கும் இது சிறந்த முறையாக இருக்கும்

உங்கள் குழந்தைகளிடம் அவர்களின் ஆர்வங்களை குறித்து பேசுங்கள் மேலும் அதில் ஆழமாக சிந்திக்கவும் அதனைப் பற்றி ஆராய பயன்படும் கேள்விகளை கேளுங்கள். அவர்கள் விரும்பக் கூடிய செயல்களை செய்ய விடுங்கள் அவர்களின் செயல்திறன் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்று கொள்வதன் வாயிலாக அவர்களின் ஆர்வங்களுக்கு உங்களுடைய ஆதரவையும் மற்றும் ஆர்வத்தையும் காட்டுங்கள்.

உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கும் வழிகாட்டல்கள் அல்லது முன்மாதிரிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு உதவுங்கள். உங்கள் குழந்தைகளின் வெற்றிகளை கொண்டாடி அவர்களின் ஆர்வத்தை மேலும் தொடர அவர்களுக்கு தொடர்ந்து ஊக்குவித்து வாருங்கள்

குழந்தைகள் தவறுகளை செய்து அவற்றிலிருந்து கற்றுக் கொள்ள அனுமதியுங்கள் கற்றல் செயல்பாட்டில் தவறுகள் என்பதே ஒரு முக்கிய பகுதியாகக்கூட இருக்கலாம். ரிஸ்க் எடுபதற்கும், புதிய விஷயங்களை முயற்சி செய்வதற்கும் ஊக்குவியுங்கள். இது அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் புதிய வாய்ப்பினை ஆராயவும் இது பயனாகும்

மரியாதை மற்றும் கருணையின் முக்கியத்துவம்

இவ்வுலகில் எல்லோரிடமும் மரியாதையும் கருணையும் அனைத்து மக்களுக்கும் காட்டப்பட வேண்டிய குணங்களில் ஒன்று என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தாருங்கள். மேலும் மற்றவர்களை எவ்வாறு மரியாதையுடன் கருணை உடனும் நடந்து கொள்வது என்பதற்குண்டான உதாரணங்களையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள் மேலும் மதியின் முக்கியம் என்பதையும் விளக்கி சொல்லுங்கள்.

அதுமட்டுமில்லாமல் நீங்களும் உங்கள் வீட்டில் மரியாதை மற்றும் கருணையை வெளிகாட்டுங்கள் இது உங்களைப் பார்த்து உங்கள் குழந்தைகள் அதுபோல கற்றுக் கொள்வார்கள். மற்றவர்களை மரியாதையுடன் கருணையுடன் நடத்தாவிட்டால் அதனால் உண்டாகும் விளைவுகளை கட்டாயம் சொல்லிக் கொடுங்கள் ஏனென்றால் உங்கள் குழந்தைகள் இது மாதிரியான செயல்பாடுகளில் செயல்படுத்துவதற்கு முன் சிந்திக்க வைக்கும். குழந்தைகளிடம் மற்றவர்களுக்கு உதவும் எண்ணங்களையும் நாம் விதைக்க வேண்டும்.

மொபைலில் செலவு செய்யும் நேரம் கண்காணிப்பு

தற்போது இருக்கும் குழந்தைகள் எல்லோரும் மொபைலில் பல மணி நேரம் செலவிட்டு வருகின்றனர் இதை கண்காணிப்பது மிக மிக முக்கியமான ஒன்று. குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணிக்க FamilyTime, Qustodio மற்றும் My Mobile Watchdog ஆகிய செயலியை பயன்படுத்தலாம். மேலும் குழந்தைகளிடம் மொபைலில் செலவிடும் நேரத்தை விலக்க வேண்டும் என்பதையும் அடிக்கடி சொல்லி வாருங்கள்.

ஆரோக்கியம், உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு முன்மாதிரியாக இருங்கள்

எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருங்கள். தினமும் நடைப்பயிற்சி, வாக்கிங், நீச்சல் அடிப்பது, விளையாட்டு விளையாடுவது உள்ளிட்ட செயல்பாடுகளை உங்கள் குழந்தைகளுடன் செய்து வாருங்கள்.

தினமும் இரவு தூங்குவதற்கு 1 மணி நேரம் முன்பு லேப்டாப் மற்றும் போன்களை ஹாஃப் செய்து வைக்கவும் அதற்கு பதிலாக புத்தகங்கள் மற்றும் விளையாடுவது போன்ற செயலில் ஈடுபடுத்த வேண்டும் உங்கள் குழந்தைகளுக்கு அதிக சர்க்கரை இருக்கும் பானங்கள் தருவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தண்ணீர், இயற்கை பழச்சாறுகள் மற்றும் பால் இவைகளை கொடுக்கலாம்

உங்கள் குழந்தைகளுக்கு தூக்கத்தின் நன்மைகளையும் சரியான நேரத்தில் தூங்குவதையும் சொல்லித்தாருங்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ஒன்றாக சேர்ந்து சமைத்து ஆரோக்கியமான உணவின் நன்மைகளை பற்றி கூறலாம்.

வாரத்தில் 2 நாட்கள் பூங்காவிற்கு செல்வது பைக்கில் பயணம் செய்வது விளையாட்டு விளையாடுவது போன்று குடும்பமாக சென்று செலவிடுவதை பற்றி திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையை முறையை நீங்களே கடைப்பிடிப்பதன் வாயிலாக உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கலாம்

குழந்தைகளுடன் நேர்மையான தொடர்பு

உங்கள் குழந்தை இளமையாக உள்ள போது கேள்விகளை கேட்கவும் அவர்களின் உணர்வுகளை வெளிக்காட்டவும் அவர்களை ஊக்குவிக்கக்கூடிய வகையில் அவர்களிடம் பேசுங்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்யுங்கள் அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கேட்டு தெறிந்து அவர்களிடம் கேள்வியும் கேளுங்கள், பதில்களையும் கேளுங்கள்

குழந்தைகளிடம் எல்லைகளை அமைத்து கொள்ளுங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் விளைவுகள் பற்றி தெளிவாக இருங்கள். உங்கள் குழந்தைகளிடம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருங்கள் அவர்கள் உங்களிடம் ஏதேனும் கவலையுடன் வரலாம் அல்லது கேள்வி கேட்கலாம் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள் அதற்கு நீங்கள் நேர்மையாக பதில் சொல்வேன் என்றும் சொல்லுங்கள்

குழந்தைகள் முன் எதிர்மறையான சொர்க்களை பயன்படுத்துவதோ அல்லது தவறுகளுக்கு அவர்களை குறை சொல்வதோ வேண்டாம். அவர்களை ஊக்குவிக்கக்கூடிய வார்த்தைகளை படுத்துங்கள்

உங்கள் குழந்தைகள் எப்படி உணர்கிறார்கள் என்பதை பற்றியும் நீங்கள் அவர்களை புரிந்து கொள்வீர்கள் என்பதை பற்றியும் அவர்களுக்கு ஆதரவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் தெரியப்படுத்துங்கள்

உங்கள் குழந்தையின் தனி உரிமைக்கு மதிப்பு கொடுங்கள் அவர்களின் அனுமதியில்லாமல் மற்றவர்களிடம் அவர்களின் தகவல்களை பகிரவே பகிராதீர்கள்

தூங்கும் நேரத்தை வழக்கமாக கடைப்பிடிக்கவும்

தினமும் உறங்குவதற்கு ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்படி தினமும் குழந்தைகளை உறங்க செய்ய வேண்டும். இரவு உறங்குவதற்கு முன்பு குளிப்பது, பல் துலக்குவது, யோகா செய்வது, தியானம் செய்வது, இனிமையான இசைகளை கேட்பது, புத்தகம் படிப்பது இதில் ஏதாவது ஒன்றை செய்வது தினமும் கட்டாயப்படுத்த வேண்டும்

தினமும் தூங்குவதற்கு முன்பு மொபைல் அல்லது லேப்டாப் பார்ப்பது அல்லது டி வி பார்ப்பதை 1 மணி நேரத்துக்கு முன்பே தவிர்க்க வேண்டும் இது உங்கள் இரவு உறக்கத்தை பாதிக்க வைக்கும். கபின் உங்கள் உடலில் ஆறு மணி நேரம் வரை இருக்கும் எனவே பிற்பகுதியில் எனர்ஜி பானங்கள் அல்லது காஃபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்

தினந்தோறும் உடற்பயிற்சி செய்யுங்கள் உடற்பயிற்சி சோர்வடைய செய்ய பயன்படும் இதனால் எளிதாக தூங்கலாம். மதிய நேரத்தில் தூங்குவதால் இரவில் உறங்குவது கடினமாக இருக்கும். நீங்கள் தூங்கும் பகுதியை இருட்டாக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்

தூங்க செல்வதற்கு முன் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் இல்லையென்றால் சரியாக தூங்க முடியாது. தூங்க செல்வதற்கு முன்பு வெந்நீரில் குளியுங்கள் ஏதாவது இதமான இசைகளை கேளுங்கள் அல்லது ஏதாவது எழுதுங்கள்.

முடிவு 2024 ஆம் ஆண்டுக்கான பெற்றோருக்குரிய தீர்மானங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நாங்க நம்புறோம். இந்த தகவல் நீங்க சிறந்த பெற்றோராக மாற உங்க குழந்தைகளுடனான உறவை மேம்படுத்த பயன்படும்.

For More Updates : Click Here

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here