நடிகர் அஜித் குமார் பற்றி நடிகை நமிதா பேசியுள்ளார்.
நடிகை நமீதா
நடிகை நமிதா, எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஏய், பம்பர கண்ணாலே, ஆணை, கோவை பிரதர்ஸ், நான் அவன் இல்லை, தீ, பில்லா, அழகான பொண்ணுதான் மற்றும் இளமை ஊஞ்சல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், சமீப காலமாக அரசியலில் அதிகம் ஆர்வம் செலுத்திக்கொண்டு வருகிறார்.

ரொம்ப ஆட்டிட்யூட்
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நமிதா நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது “பில்லா படத்தில் நடிப்பதற்கு முன்பாக நடிகர் அஜித் குமாரை பார்க்கவே இல்லை.

பில்லா படம் முடிந்த பிறகும் அஜித் குமாரை சந்திக்கவில்லை. அஜித் குமார் போலவே நானும் ரொம்ப பிஸியாக இருப்பேன். யாரிடமும் சரியாக பேசவும் மாட்டேன். அதனால். எனக்கு ரொம்ப ஆட்டிட்யூட் என சொல்லுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here