100 கோடி வசூலை தாண்டியது சூர்யாவின் கங்குவா : ஓடிடி-யில் ரிலீஸ்?..

0
94

கங்குவா படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்து, தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ளது.

கடந்த நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன கங்குவா படம் பெரும் நெகடிவ் விமர்சனங்களை எதிர்கொண்டது. குறிப்பாக படம் இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

ரசிகர்கள் படம் உலகத்தரத்தில் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு படத்தைப் பார்த்தனர். ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும், படத்தின் திரைக்கதை மற்றும், பின்னணி இசை பெரும் விமர்சனத்திற்கு ஆளானது.

இது படத்தின் வசூலை பெரும் அளவு பாதித்தது. இப்படியான நிலையில் படம் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 

இது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. படம் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. மக்கள் மீண்டும் கங்குவா படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கங்குவா ஓடிடி?

இந்நிலையில், கங்குவா படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறிய ரசிகர்கள் படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும்? என ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர்களுக்காக இப்போது படம் எந்த ஓடிடியில் வெளியாகும் என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, அமேசான் பிரைம் கங்குவா படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. படத்தினை டிசம்பர் 13 அன்று ஸ்ட்ரீமிங் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here