பொதுவாக திரையுலகில் நிறைய சம்பளம் வாங்கும் நடிகர்கள் விலை உயர்ந்த கார் வைத்திருப்பார்கள். கார்களின் மீது அதிக பிரியம் கொண்ட சில நடிகர்கள் பல கார்களை வைத்திருப்பார்கள். நடிகர் கவுண்டமணி 10 க்கும் கூடுதலான கார்களை வைத்திருந்ததாக கூட ஒரு தகவல் உண்டு.

நகைச்சுவை நடிகரே அப்படி எனில் ஹீரோக்கள் குறித்து சொல்ல வேண்டுமா!.. அனைத்து பெரிய நடிகர்களிடமும் அதிக விலையுள்ள சில கார்கள் இருக்கிறது. ஆடி, ரோல்ஸ் ராய்ஸ், பி.எம்.டபிள்யூ உள்ளிட்ட கார்கள் அவர்களிடம் இருக்கிறது. அதேபோல், அதிக பட்ஜெட்டுகளில் படமெடுக்கும் பெரிய தயாரிப்பாளர்களும் விலை அதிகம் உள்ள கார்களை வைத்திருப்பது வழக்கம்.
இது கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எல்லாவற்றுக்கும் பொருந்தும். அதிக விலை கொண்ட காரை வைத்திருப்பதை ஒரு கவுரமாகவே பலரும் நினைப்பார்கள். இந்நிலையில், விலை உயர்ந்த கார்களில் ஒன்றான லம்போகினி காரை வைத்துள்ள திரைப்பிரபலங்கள் குறித்து இங்கே பார்ப்போம்.
தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் கலக்கி வரும் நடிகர் பஹத் பாசில் ஒரு லம்போகினி காரை வைத்துள்ளார். இதன் விலை 3 கோடியே 15 லட்சம். அவர் இந்த காரை அடிக்கடி பயன்படுத்துகிறார். தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே வைத்துள்ள லம்போகினி காரின் விலை 3 கோடியே 45 லட்சம் ரூபாய்.
மலையாள நடிகர் பிரித்திவிராஜ் வைத்துள்ள லம்போகினி காரின் விலையும் 3 கோடியே 15 லட்சம் ரூபாய் தான். அதேபோல், தமிழில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் வைத்துள்ள லம்போகினி காரின் விலை ரூ. 3 கோடியே 69 லட்சம் ஆகும். இதில், அஜித் வைத்துள்ள லம்போகினி காரின் விலை தான் மிகவும் அதிகம்.
அதன்விலை 34 கோடி என கூறப்படுகிறது. அஜித் ஒரு கார் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். இவரிடம் பல வகையான பைக்குகள் மற்றும் கார்கள் இருக்கிறது. குறிப்பாக பல லட்சம் மதிப்பிலான நிறைய பைக்குகளை அஜித் வைத்துள்ளார். அடிக்கடி அந்த பைக்குகளை எடுத்துகொண்டு நண்பர்களுடன் ஊர் சுற்ற சென்றுவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here