கடந்த சில ஆண்டுகளாக “கருப்பர் நகரம்” என்னும் தலைப்பில் தமிழ் சினிமாவில் ஒரு படம் உருவாகி வருகிறது. வடசென்னை மக்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் இயக்குநர் கோபி நயினார் அவர்கள்.
இவர் “அறம்” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். “அறம்” என்னும் படத்தை தயாரித்தவர் நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான கத்தி என்ற படத்தின் கதை தன்னுடையது என்று உரிமை கோரினார் இயக்குனர் கோபி நயினார்.நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார். தான் இயக்கிய ஆவண படத்தை கத்தி என்ற பெயரில் நடிகர் விஜய் அவர்களை வைத்து படமாக எடுத்ததாக குற்றம்சாட்டினார். பிறகு அறம் என்னும் படத்தின் மூலம் தான் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை தமிழ் சினிமாவில் நிரூபித்து காட்டினார்.
ரஞ்சித் அவர்கள் இயக்கிய மாபெரும் வெற்றி பெற்ற படம் மெட்ராஸ். தன்னுடைய கதையை இயக்குநர் பா.ரஞ்சித் திருடி தான் மெட்ராஸ் படத்தை எடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து ஊடகங்களிலும் அவர் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வடசென்னை மக்களின் வாழ்வியலையும், சிக்கலையும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கூறும் கருப்பர் நகரம் என்னும் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது. நடிகர் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை கோபி நயினார் கதை எழுதி இயக்கி உள்ளார். கோபி நய்னார் அவர்களுக்கு இப்படம் இரண்டாவது படமாகும்.
அறம் என்னும் தரமான படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்த இயக்குனர் கோபி நயினார் அவர்கள் “கருப்பர் நகரம்” எனும் படத்தின் மூலம் மீண்டும் நிரூபிப்பாரா என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here