Home Entertainment Shiva Rajkumar: தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஹீரோவாக களமிறங்கும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ...

Shiva Rajkumar: தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஹீரோவாக களமிறங்கும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார்!

0
139

தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த சிவ ராஜ்குமார் தற்போது ஹீரோவாக களமிறங்க போகும் செய்தியை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

பிராந்திய எல்லைகளை தாண்டி எல்லா ரசிகர்களின் மனங்களைக் கவர ஒரு சில நடிகர்களால் மட்டும் தான் முடியும். அந்த வகையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் ஒருவர். பல வருடங்களாக, தமிழ் ரசிகர்களிடத்தில் மிகுந்த அன்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவரது கன்னட திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மடடும் வந்திருந்தாலும் அவரது திரை இருப்பு மற்றும் ஸ்டைலான ஸ்வாக் ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து நடிகர் சிவராஜ்குமார் ‘ஜாவா’ படத்தின் மூலம் தமிழில் நேரடியாக ஹீரோவாக அறிமுகமாக போகிறார். இந்த படம் தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளிலும் உருவாக இருக்கிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இந்தப் படத்தை செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் இருவரும் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்தத் தயாரிப்பு நிறுவனம் கன்னடத் திரையுலகில் பல சிறந்த படைப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது, நடிகர் சிவராஜ்குமாருடன் ‘ஜாவா’ படத்திற்காக சேர்ந்ததில் சந்தோஷம் அடைகிறது. இதற்கு முன், நடிகர் அதர்வா முரளி ஹீரோவாக நடித்த ‘ஈட்டி’ மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ஐங்கரன்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய ரவி அரசு 3 வது படமாக தமிழில் இந்தப் படத்தை இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குநர் ரவி அரசு பேசுகையில், “உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை பெற்றிருக்கும் சிவராஜ்குமார் போன்ற ஒரு நட்சத்திரத்தை வைத்து இயக்குவது எனக்கு கிடைத்த பெருமை. இது ஒரு அவுட்-அண்ட்-அவுட் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் திரைப்படமாக உருவாக்குகிறோம். அதே நேரம் இத்திரைப்படம் அவரது ரசிகர்களை 100% திருப்திப்படுத்தும்.மேலும், தமிழ் பார்வையாளர்களை தொடக்கம் முதல் முடிவு வரை ஈர்க்கும். செப்டம்பரில் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த வாரம் ‘ஜாவா’ என்ற டைட்டிலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்கான கிளிம்ப்ஸ் காட்சியை படமாக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்த படத்தில் ‘ஜாவா’ பைக்கிற்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. தற்போது இதை மட்டும்தான் என்னால் சொல்ல முடியும்” என்றார். படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்து பேசும்போது, ​நடிகர் சிவராஜ்குமார் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சமுத்திரக்கனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் என தெரிவித்துள்ளார். பிற அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here