பல ஆண்டுகள் கழித்து சூப்பர்ஸ்டாரை நேரில் சந்தித்த அஜித்.. வெளிவந்த போட்டோ இதோ

0
62
ajithkumar meets superstar
ajithkumar meets superstar

நடிகர் அஜித்

தமிழ்நாட்டு ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடக்கூடிய நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், சில காரணங்களால் நிறுத்திக்கப்பட்டது. இதற்கிடையில் தனது குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஷூட்டிங்கை அஜித் துவங்கினார்.

இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. சண்டை காட்சிகளுடன் துவங்கிய இந்த ஷூட்டிங்கானது துவங்கிய நிலையில், நடிகை நயன்தாரா 2 நாட்கள் மட்டும் நடித்து விட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கம் மற்றும் அஜித் நடிப்பு என்பதால் பெரிதும் எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்ஸ்டாரை சந்தித்த அஜித்

குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கிற்கு பக்கத்தில் தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் விஸ்வம்பரா ஷூட்டிங்கும் நடந்து வந்துள்ளது. இதை தெறிந்து சிரஞ்சீவியை நேரில் சென்று சந்தித்துள்ளார் நடிகர் அஜித். சந்திப்பில் எடுக்கப்பட்ட போட்டோவை சிரஞ்சீவி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் அஜித் பற்றி பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். இதில் அஜித்துடைய முதல் படத்தின் இசை ரிலீஸ் விழா என் தலைமையில் நடந்தது. என்னுடைய படத்தில் அவருடைய மனைவி ஷாலினி நடித்துள்ளார். இத்தனை வருடங்களில் அஜித்தின் வளர்ச்சியை பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன் போன்ற பல விஷயங்களை அந்த பதிவில் பகிர்ந்துள்ளார் சிரஞ்சீவி.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here