கல்லீரல் கோளாறால் அவதிப்பட்டு வந்த தனுஷ் பட நடிகர் அபினய் இன்று
அதிகாலை காலமானார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான துள்ளுவதோ இளமை என்னும் திரைப்படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானவர் அபினய். அப்படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஜங்க்ஷன், சிங்கார சென்னை, பொன் மேகலை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த இவர் சில விளம்பரங்கள் மற்றும் பின்னணி குரல் (dubbing) துறைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் வறுமையில் வாடுவதாக அபினய் சில பேட்டிகளில் கண்ணீருடன் கூறியிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் தொடர்பான உடல்நலக் குறைபாடால் சிகிச்சை பெற்று வந்த அபினய் தற்போது எலும்பும் தோலுமாக வயிறு வீங்கிய நிலையில் சிரமப்பட்டு வருவதாக கூறி சில பேட்டிகளில் பிரபலங்களிடம் உதவி கேட்டிருந்தார். அவரது புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. அவருக்கு நடிகர் தனுஷ் சமீபத்தில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். அவரைத் தொடர்ந்து சின்னத்திரை நடிகர் கே பி ஒய் பாலா மற்றும் பலர் தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்து வந்தனர்.
இந்நிலையில் 44 வயதான நடிகர் அபினய் இன்று அதிகாலை 4 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவு செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உறவினர்கள் யாரும் இன்றி தனியே தவிக்கும் அவரது உடலை நடிகர் சங்கங்கள் முன்வந்து அவருக்கான சடங்குகளை செய்து வழி அனுப்பினால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபிநயின் மறைவு செய்திக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


