Home Entertainment பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ படத்தின் First Look போஸ்டர்.. இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கவிருந்தாரா

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ படத்தின் First Look போஸ்டர்.. இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கவிருந்தாரா

0
99

பிரதீப் ரங்கநாதன் நடித்து, இயக்கி ரிலீசான திரைப்படம் லவ் டுடே. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க முடிவு செய்த பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் டைரக்க்ஷனில் LIC எனும் படத்தில் கமிட்டானார். ஆனால், இந்த படத்தின் தலைப்பு மீது சர்ச்சை கிளம்பிய காரணத்தினால், தற்போது LIK (love insurance company) என டைட்டிலை மாற்றியுள்ளனர்.

நேற்று இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், இன்று First look போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். மேலும் சீமான் இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். மேலும் S J. சூர்யா, க்ரீத்தி ஷெட்டி இவர்களும் நடிக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்தாரா

சிவகார்த்திகேயன் தான் இந்த LIK படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது. S.K . 17 திரைப்படமாக உருவாகவிருந்தது தான் LIK. இப்படத்திற்காக விக்னேஷ் சிவன் – சிவகார்த்திகேயன் இணையவிருந்த நிலையில், VFX காரணமாக படத்தின் பட்ஜெட் கூடுதலானது. இதனால் இப்படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது அந்த கதையை தான் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் எடுத்துகொண்டிருக்கிறார் என கூறப்படுகிறது. LIK படத்தின் First Look போஸ்டர் இதோ.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here