Home Stories Photos Videos Join
வேளச்சேரி கூட்டத்தை பார்த்து அதிர்ந்த கீர்த்தி சுரேஷ்?! 😱🔥
சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் வைரல் மொமன்ட்ஸ்!
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

திரையுலகமே திரண்டு வாழ்த்திய பிரம்மாண்டத் திருமணம்! KRG குழும கண்ணன் ரவி இல்ல விழாவில் குவிந்த முன்னணி நட்சத்திரங்கள்!

சர்வதேச அளவில் பல்வேறு தொழில்களில் கோலோச்சி வரும் KRG குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், முன்னணித் திரைப்படத் தயாரிப்பாளருமான கண்ணன் ரவி இல்லத் திருமண விழா சென்னையில் கோலாகலமாக…

சர்வதேச அளவில் பல்வேறு தொழில்களில் கோலோச்சி வரும் KRG குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், முன்னணித் திரைப்படத் தயாரிப்பாளருமான கண்ணன் ரவி இல்லத் திருமண விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. தென்னிந்திய மற்றும் இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்கள் யார்? – பிரம்மாண்டக் கூட்டணி:

  • KRG Group of Companies நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணன் ரவி – KRD Hospitality நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபா ரவி தம்பதியினரின் மகனும், KRG Productions நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளருமான தீபக் ரவி.
  • வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் D.M. கதிர் ஆனந்த் – கிங்ஸ்டன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கீதா கதிர் ஆனந்த் தம்பதியினரின் மகள் கே. செந்தாமரை.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அக்டோபர் 31-ம் தேதியும், திருக்கல்யாண வைபவம் நவம்பர் 1-ம் தேதியும் சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள பிரபல R.K. கன்வென்ஷன் ஹாலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சங்கமித்த இந்தியத் திரையுலகம்:

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரையுலகங்களைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், முன்னணி இயக்குநர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சர்வதேசத் தொழிலதிபர்கள் எனப் பலரும் நேரில் வந்து மணமக்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கண் கவரும் பிரம்மாண்ட அலங்காரங்கள் மற்றும் நட்சத்திரங்களின் வருகையால் இந்நிகழ்வு பெரும் திருவிழா போல அமைந்தது.

Advertisements

KRG குழுமம் மற்றும் திரைப்பயணம்:

துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு கட்டுமானம், எலக்ட்ரோ மெக்கானிக்கல் சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் Kannan Ravi Group (KRG), தனது KRG Productions மூலம் ‘இராவண கோட்டம்’, ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘TN 2026’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளதுடன், அடுத்தடுத்த படங்களையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here

Related Latest News