Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

ஜிவி பிரகாஷைபோல நடிகை நமீதா காதல் கணவரை பிரிகிறாரா? அவரே உடைத்த உண்மை

நடிகை நமீதா தனது காதல் கணவரை பிரிய போவதாக வெளிவந்த தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகை நமீதா கேப்டன் விஜயகாந்த் நடித்த அண்ணா படத்தில்…

நடிகை நமீதா தனது காதல் கணவரை பிரிய போவதாக வெளிவந்த தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை நமீதா

கேப்டன் விஜயகாந்த் நடித்த அண்ணா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நமீதா. பின்பு பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்ததுடன், கவர்ச்சியிலும் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

இவரது கவர்ச்சியான உடைக்கும், நடனத்திற்கும் அநேக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. உச்ச நட்சத்திர நடிகையாக இருந்த இவர், ஒரு கட்டத்தில் உடல் எடை கூடுதலானதால் சினிமாவை விட்டுச் சென்றார்.

கடந்த 2017ம் வருடம் வீரேந்திர சௌத்ரி என்பவரைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்ட நமீதாவிற்கு 2022ம் வருடம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. தற்போது அவர் அரசியலிலும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் நடிகை நமீதா தனது காதல் கணவரை பிரிய போவதாக தகவல் வெளியானது. ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் தனது காதல் மனைவியை பிரிந்துள்ளார். இந்த நிலையில், நமீதாவின் இந்த தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடைய வைத்தது.

Advertisements

இது குறித்த தகவல் காட்டுத்தீயாய் பரவியது. இதையடுத்து இதுவரை மௌனம் காத்து கொண்டிருந்த நமீதா தற்போது உண்மையை உடைத்திருக்கிறார்.

நமீதா பதிலடி

நமீதாபேசும் போது, எங்களைப் பற்றிய விவாகரத்து வதந்தி வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு என் கணவருடன் எடுத்து கொண்ட போட்டோக்களை வெளியிட்டு இருந்தேன்.

ஆனாலும் நாங்கள் விவாகரத்து வாங்கி விட்டதாக வதந்தி பரவி வருகின்றது. எதை வைத்து இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பது புரியவில்லை.

நடிகையான பின்னர் எவ்வளவோ வதந்திகளை பார்த்துவிட்டதால், என் கணவரும் நானும் இந்த விவாகரத்து வதந்தியை பெரிதாக எடுத்துக்கொள்ளவிலை” என்று கூறியுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here