Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

விக்ரம் திரைப்படம் வெளிவந்து 2 ஆண்டுகள் நிறைவு..பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

2YearsofVikram உலகநாயகன் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் என்று நம் எல்லோருக்கும் தெரியும். அவரை பார்த்து தான் லோகேஷ் சினிமா உலகிற்கே வந்தார். அப்படி,…

2YearsofVikram

உலகநாயகன் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் என்று நம் எல்லோருக்கும் தெரியும். அவரை பார்த்து தான் லோகேஷ் சினிமா உலகிற்கே வந்தார்.

அப்படி, தான் பார்த்த மாபெரும் நட்சத்திரத்தை தானே இயக்கக்கூடிய வாய்ப்பை விக்ரம் திரைப்படத்தில் பெற்றார் லோகேஷ். ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த 2022ஆம் வருடம் பிரமாண்டமாக வெளிவந்தது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, காயத்ரி, செம்பன் வினோத் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். சூர்யா கடைசியாக கேமியோ ரோலில் வந்து படத்தை தூக்கி நிறுத்தினார். இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் அனிரூத்.

மக்களிடையே மிகப்பெரிய வெற்றியடைந்த இப்படம் இன்றுடன் வெளிவந்து இரண்டு வருடங்களை கடந்துள்ளது. இதனை #2YearsofVikram என்கிற Hastag உடன் சமுக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisements

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

இந்த நிலையில், விக்ரம் படத்தின் வசூல் பற்றி பார்க்கலாம். விக்ரம் திரைப்படம் உலகநாயகன் கமல் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவானது. இத்திரைப்படம் உலகளவில் ரூ. 435 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்தது.

இதுவே கமல் ஹாசனின் திரை வாழ்க்கையில் அதிகமாக வசூல் செய்த படமாகும். உலகளவில் எப்படி புதிய வசூல் சாதனையை விக்ரம் படம் செய்ததோ, அதே போல் ரூ. 185 கோடி வரை வசூல் செய்து தமிழகத்திலும் வசூல் சாதனையை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here