பிக்பாஸ் ஆயிஷா அச்சு அசல் மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு பதிவு செய்த ரீல்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
புகழ் பெற்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி கடந்த 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது 8 வது சீசனில் நுழைய இருக்கிறது.

வழக்கமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில், தொலைக்காட்சி பிரபலங்கள், சமூக வலைத்தளப்பிரபலங்கள், சாதிக்க எண்ணுபவர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.
அந்த வரிசையில் கடந்த சீசனில் உள்ளே சென்றவர் தான் ஆயிஷா. இவர் பிக்பாஸ் அமீரின் உடன் பிறவா சகோதரி என்றும் சொல்லப்படுகிறது. இவர் குடும்பமாக இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு பிரபலமானவர்.
மணப்பெண் அலங்காரம் போல் வெளியான காட்சி
ஆயிஷா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நிக்ஷனுடன் சேர்ந்து பெரிய சர்ச்சையில் சிக்கினார்.
கடுமையான எதிர்ப்புக்கள் விமர்சனங்களை சந்தித்த ஐசு குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை.
இப்படியொரு நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள ஐசு தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு மணப்பெண் மாதிரி அலங்காரம் செய்து கொண்டு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஐசுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருகின்றனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here