Home Entertainment வைரலாகும் ஸ்ரீ திவ்யாவின் ‘மெய்யழகன்’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் !

வைரலாகும் ஸ்ரீ திவ்யாவின் ‘மெய்யழகன்’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் !

0
174

தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கு உண்டான அங்கீகாரம் கிடைத்து தொடர்ந்து அவர்கள் திரைத்துறையில் தொடர்ந்தாலும் நடிகைகளுக்கு உண்டான தொடர் பயணம் என்பது சாத்தியமற்ற ஒரு விடயமாகவே பார்க்கப்படுகிறது.விதிவிலக்காக சில நடிகைகள் தொடர்ந்து இருந்த போதிலும் பலருக்கு திறமை இருந்தும் வாய்ப்புகள் எளிதில் கிடைப்பதில்லை.

இவ்வரிசையில் குறிப்பாக சொல்ல வேண்டிய நடிகை தான் ஸ்ரீ திவ்யா.தமிழ் , தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்த ஸ்ரீ திவ்யா தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் நடித்தன் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் தமிழ் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீ திவ்யா தமிழ் ரசிகர்களின் கிரஷாக மாறினார். இப்படியிருக்க சிலகாலம் திரைத்துறையிலே இல்லாமல் போன ஸ்ரீ திவ்யா மறுபடியும் கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

வருகிற செப்டம்பர் மாத முடிவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வெகுவேகமாக நடந்துகொண்டிருக்கிறது.இந்நிலையில் நடிகை ஸ்ரீ திவ்யாவின் படப்பிடிப்பு தள போடோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here