சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்பதை விட, ஒரு இயக்குனராகவும் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். தன்னுடைய அப்பாவை வைத்து இவர் இயக்கிய ‘கோச்சடையான்’ திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் ரிலீசான நிலையில், எதிர்பார்த்த வெற்றியை அளிக்க தவறியது. இந்த படத்தின் நஷ்டம் பற்றி பஞ்சாயத்தானது இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இதை தொடர்ந்து, தன்னுடைய அக்காவின் Ex கணவர் தனுஷை வைத்து இவர் இயக்கிய படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. இந்த திரைப்படம் முதலுக்கு மோசம் இல்லாமல் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் தனுஷ் அமலாபாலுடன் சேர்ந்து நடித்த போது தான், இருவரும் நெருக்கம் காட்டியதாக சர்ச்சை கிளம்பியது. பின்னர் அது ரஜினிகாந்த் வரை போனதாக கூறப்பட்டது.

ரஜினிகாந்த் போலவே அவரின் இரண்டு மகள்களும், ஏதாவது ஒரு விஷயத்தை செய்து அதை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பவர்கள். ஐஸ்வர்யா முழுவதும் ஆன்மீகத்திலும், இயக்கத்திலும் ஆர்வம் கொண்டுள்ள நிலையில், சொந்தர்யா அக்காவையே மிஞ்சும்படி பல தொழில்கள் மற்றும் வெப் சீரிஸ் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் இவர் பொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரிஸாக டைரக்ட் செய்ய போவது குறித்து அறிவித்து, அது கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், பின்னர் அசோக் செல்வனை கொண்டு வெப் சீரிஸ் ஒன்றை இயக்குவதற்கு தயாரானார். இதற்கான பூஜைகளை செய்த நிலையில், அது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வமான தகவல் வெளியாகவில்லை.
மேலும் கடந்த 2021-ஆம் வருடம் ஹூட் என்கிற குரல் சமூக ஊடகமாக தளத்தை ஆரம்பித்தார். தமிழ் உட்பட 15 இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகளிலும் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியில் படிக்காதவர்கள் கூட சுலபமாக குரல் வழியாக தங்களின் கருத்தை சொல்லும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.

வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆப்பை பயன்படுத்தும் யூசர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதால், அதிரடியாக இந்த நிறுவனத்தை இழுத்து மூடுவதற்கு சௌந்தர்யா முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ செய்தியும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here