அனிருத் இதுரை 2 பிலிம்பேர் விருதுகள், 9 சைமா விருதுகள், 6 எடிசன் விருதுகள் மற்றும் 5 விஜய் டிவி விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் மலேசியா, அபுதாபி, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இளை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் உரு படத்திற்கு இசையமைத்து பாடலும் பாட பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். அடுத்த ஒரு ஆண்ட்டில் தன் கைவசம் 10 படங்கள் இருப்பதாக அனிருத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது கூட்டிக் கழித்து பார்த்தால், சுமார் 100 மோடிக்கு பல அவர் பணம் வசூல் செய்யப்போகிறார்.
2011ஆம் ஆண்டின் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான “3” படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். “ஓய் திஸ் கொலவெறி” என்ற பாடல் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். பிறகு 2014ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் “கத்தி” படத்தின் மூலம் மேலும், பிரபலமானதுடன், சம்பளத்தை பல மடங்கு உயர்த்திக் கொண்டார்.

தற்போது அனிருத் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். மேலும், இசை நிகழ்ச்சி என்றால் தனியாக கோடிக் கணக்கில் பணம் பெறுகிறார்.
பின்குறிப்பு என்வென்றால், ஆஸ்கர் நாயகன், 7முறை தேசிய விருதுவென்ற ஏ.ஆர்.ரஹமான் அவர்கள் கூட 8கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். இசைஞானி இளையராஜா கூட படத்திற்கு தகுந்தாற்போல் தன் சம்பளத்தை குறைத்துக் கொள்வாராம்.
ஆனால், அனிருத்-யின் சம்பளம் ரொம்ப, ரொம்ப அதிகம் என்று கோலிவுட் பிரபலங்கள் குறை கூறுகிறார்கள்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here