Screen Scene Media Entertainment பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் M . ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் ‘பிரதர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி’ ரிலீசாகி ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் அதிரவைக்கும் இசையில் பால் டப்பா எழுதி பாடிய உற்சாகம் நிறைந்த ‘மக்காமிஷி’ பாடலுக்கு சாண்டி மாஸ்டர் துடிப்பு நிறைந்த நடன அசைவுகளை வடிவமைத்துள்ளார்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் M. ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘பிரதர்’ படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி’, அந்த படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எழுதி பாடிய பால் டப்பா மற்றும் டான்ஸ் அமைத்த சாண்டி மாஸ்டர் ஆகியோரால் ரிலீஸ் செய்யப்பட்டது.
‘மக்காமிஷி’ என்றால் என்ன என்று இணையத்தளங்களில் சுற்றி வந்த கேள்விக்கு மாஸ், கெத்து, ஸ்டைல் என்று பொருள் வரும் என தெரிவித்து ஹாரிஸ் ஜெயராஜ், பால் டப்பா மற்றும் சாண்டி மாஸ்டர் யூகங்களுக்கு எல்லாம் சில நாட்களுக்கு முன்பே முற்றுப்புள்ளி வைத்திருந்த நிலையில் இப்பாடல் சனிக்கிழமை அன்று (ஜூலை 20) வெளியிடப்பட்டது.
ரிலீசான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களின் உற்சாக வரவேற்பை பெற்றிருக்கும் ‘மக்காமிஷி’ பாடல் இளைஞர்களால் வைப் (vibe) பண்ணப்பட்டு வருகிறது. பல்வேறு சமூக வலைதளங்களில் இதயங்கள், எக்கச்சக்க பார்வைகள் மற்றும் லைக்குகளை குவித்து வருகிறது.
‘மக்காமிஷி’ பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதை பார்த்து பெரும் உற்சாகமடைந்துள்ள படக்குழவினர் ‘பிரதர்’ திரைப்படத்தின் மற்ற பாடல்களை அடுத்தடுத்து வெளியிடுவதற்கு தயாராகி வருகின்றனர். ‘பிரதர்’ திரைப்படத்திற்காக 5 பிரமாதமான பாடல்களை ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நீண்ட தினங்களுக்கு பிறகு ஒரு முழுமையான ஆல்பமாக இது அமையும் என்று இயக்குநர் ராஜேஷ் கூறியுள்ளார்.
‘பிகில்’, ‘நட்பே துணை’, ‘தடம்’ போன்ற 25 க்கும் மேற்பட்ட ஹிட் படங்களை விநியோகம் செய்து, ‘தாராள பிரபு’, ‘சாணி காயிதம்’, ‘மத்தகம்’, மற்றும் ‘அகிலன்’ என தயாரிப்பிலும் முத்திரை பதித்து கொண்டிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த ‘பிரதர்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழும் ஓடிடி உரிமையை ஜீ5 தளமும் பெற்றுள்ளன என்பது குறிப்படத்தக்கது.

ஒரு இளைஞன் மற்றும் அவரது சகோதரிக்கும் உள்ள பாசப்பிணைப்பை கலகலப்பாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்லும் ஒரு குடும்ப திரைப்படமான ‘பிரதர்’, ஜெயம் ரவியின் 30 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பிரதர்’ படத்தில் பிரியங்கா மோகன் கதை நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், சீதா,விடிவி கணேஷ், அச்யுத் குமார், ‘கே ஜி எஃப்’, ‘புஷ்பா’, ‘ஜெய் பீம்’, புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ், சதீஷ் கிருஷ்ணன், எம் எஸ் பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால் மற்றும் மாஸ்டர் அஷ்வின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘பிரதர்’ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
‘பிரதர்’ படக்குழுவினர் விவரம்
தயாரிப்பு நிறுவனம் | Screen Scene Media Entertainment Pvt. Ltd. |
எழுத்து, இயக்கம் | ராஜேஷ் M |
இசை | ஹரிஸ் ஜெயராஜ் |
நடிப்பு | ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, VTV கணேஷ், நட்ராஜ் சுப்ரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம் எஸ் பாஸ்கர், சுரேஷ் சக்ரவர்த்தி, விருத்தி விஷால், மாஸ்டர் அஷ்வின் |
நிர்வாக தயாரிப்பாளர்கள் | கே.எஸ். செந்தில் குமார், வி.குரு ரமேஷ் |
விநியோகத் தலைவர் | எஸ்.கிரண் குமார் |
ஒளிப்பதிவு | விவேகானந்த் சந்தோஷம் |
படத்தொகுப்பு | ஆஷிஷ் ஜோசப் |
கலை இயக்குநர் | ஆர்.கிஷோர் |
நடன அமைப்பு | சாண்டி, சதீஷ் கிருஷ்ணன் |
பாடலாசிரியர்கள் | தாமரை, விக்னேஷ் ராமகிருஷ்ணா, பார்வதி மீரா, பால் டப்பா |
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்கள் | எஸ்.சரவண குமார், கார்த்திக் ஆனந்தகிருஷ்ணன் |
ஆடை வடிவமைப்பாளர்கள் | பிரவீன் ராஜா, பல்லவி சிங் |
ஒலி வடிவமைப்பாளர் | டி.உதயகுமார் Df.Tech |
VFX | ஆர். ஹரிஹர சுதன் |
DI | அஸ்வினி – புரோமோ ஒர்க்ஸ் |
ஸ்டில்ஸ் | முருகதாஸ் |
ஒப்பனை | பிரகாஷ் |
வடிவமைப்புகள் | ராஜா (டிசைன் பாயிண்ட்) |
புரோமோ கட்ஸ் | நந்தன் சூர்யா |
மக்கள் தொடர்பு | நிகில் முருகன் |
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here