நெகட்டிவ் தலைப்பை வைத்து மோசம் போன விஜய் ஆண்டனி.. 8 தோல்விக்கு பிறகு வரும் மழை பிடிக்காத மனிதன்

0
99

விஜய் ஆண்டனி இவர் முகத்தில் எப்பொழுதுமே ஒரு சந்தோஷம் இருக்காது. இவர் முகம் அப்படியே செட் ஆகிடுச்சு. மக்களும் ஒரே முகத்தை பார்த்து இவரை சினிமாவில் கொண்டாடத் ஆரம்பித்து விட்டனர். இடையில் அவருக்கு அதிக பர்சனல் சங்கடங்கள். 12ஆம் வகுப்பு படிக்கும் இவரது மகள் தற்கொலை பண்ணிக்கொண்டார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளார் விஜய் ஆண்டனி.

இவர் எடுக்கும் படங்கள் அனைத்திற்கும் நெகட்டிவ் டைட்டில் மட்டுமே வைக்கிறார். ஏற்கனவே இவரது சோகமான முக தோற்றம் மற்றும் இவர் வைக்கும் நெகட்டிவ் தலைப்புகள் என இவரை ஒரு சோக கதாநாயகனாக அனைவரிடம் கொண்டு சென்றது. இன்று இவர் நடித்து வெளிவந்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன்.

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான இந்த படம் இதுவரை நல்ல விமர்சனங்களை அடைந்து வருகிறது. படத்தில் திரைக்கதை நன்றாக இருக்கிறது என்றும் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத பல விஷயங்கள் இதில் இருக்கிறது என படத்தை பார்த்தவர்கள் சொல்லி வருகின்றனர்.

8 தோல்வி படங்களுக்கு பின் வரும் மழை பிடிக்காத மனிதன் விஜய் மில்டன் இயக்கிய இந்த படமும் விஜய் ஆண்டனிக்கு நெகட்டிவ் டைட்டில் ஆக அமைந்து இருக்கிறது. ஆக்சன் திரில்லர் படமாக வெளிவந்த இந்த படம் விறுவிறுப்பாக போகிறது என அனைவரும் சொல்கின்றனர். விஜய் ஆண்டனியை தவிர சத்யராஜ், பொன்வண்ணன், சரண்யா சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசை விஜய் ஆண்டனி தான் அமைத்துள்ளார். பிச்சைக்காரன், கொலைகாரன, கொலை, சைத்தான், திமிரு பிடித்தவன், எமன் ஆகிய நெகடிவ் டைட்டிலில் இவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வியை தழுவியது. இப்பொழுது மழை பிடிக்காத மனிதன் நெகட்டிவ் டைட்டிலில் படம் வெளி வந்தாலும் நல்ல விமர்சனத்தை பெற்றுக்கொண்டிருக்கிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here