ஹீரோ வாய்ப்பு கிடைக்கலை… அப்போ என்ன பண்ண விஜய் டிவிக்கு திரும்பும் அசீம்…

0
58

பிக் பாஸ் தமிழ் சீசனில் வெற்றியாளரான நடிகர் அசீம் தற்போது மறுபடியும் சீரியல் பக்கம் தலை காட்டியிருக்கிறார். இது பற்றி மேலும் புதிய அப்டேட்கள் வெளியாகவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

சன் டிவியின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அசீம். பின்னர் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தவருக்கு விஜய் தொலைக்காட்சி கடைக்குட்டி சிங்கம் சீரியலில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கொடுத்தது. அதில் தன்னுடன் சேர்ந்து நடித்த சிவானி நாராயணனுடன் அசீம் காதல் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தன்னுடைய மனைவியை விவாகரத்து பண்ணி விட்டார் என்ற தகவல்களும் சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுத்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசனில் நுழைந்தார். அதுவரை தமிழ் சீசனில் அமைதியாக சண்டை இடும் போட்டியாளர்கள் வெற்றி பெற்ற நிலையில் தன்னுடைய புதிய ஸ்டேடர்ஜியால் ஒவ்வொரு வாரமும் கணிசமான ஓட்டுகளை வாங்கி குவித்தார் அசீம்.

மேலும் எல்லா போட்டியாளர்களும் அவருக்கு எதிராக இருந்ததும் அவரின் வெற்றி வாய்ப்பை மேலும் அதிகரிக்க செய்தது. அசீமுக்கு விக்ரமன், ஷிவானி என இருவரும்கடும் போட்டியாக இருப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் மிக அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் பிக் பாஸ் சீசன் வெற்றியாளர் ஆனார் அசீம்.

இது கமலுக்கே பிடிக்கவில்லை என டிவி நிர்வாகத்தில் இருந்து கிசுகிசுக்கள் வந்து இருந்தாலும் கமல் அசீமை நிகழ்ச்சியில் நிறைய திட்டியதும். விக்ரமன் பக்கம் கூடுதலாக சாய்ந்ததுமே அசீமிற்கு ஓட்டு வங்கி கூடுதலாக முக்கிய காரணமாக அமைந்தது. இதை அடுத்து கதாநாயகனாக வெள்ளித்திரையில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இருந்தும் 2 வருடங்கள் கடந்துள்ள நிலையில், கோலிவுட்டில் இருந்து அசீமிற்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வராமல் இருக்கிறது. இதனால் மறுபடியும் சீரியல் பக்கம் எண்ட்ரியாக இருக்கிறார். அந்த வகையில், விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே நாடகத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாக போகும் சீரியலில் அசீம் கதாநாயகனாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here