தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் ஒவ்வொன்றாக வெளியிட காத்துக் கொண்டிருக்கின்றன. அதில் அண்மையில் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் ஒட்டுமொத்த ரசிகர்கள் அனைவரையும் இந்தியன் 2 திரைப்படம் ஏமாற்றியது என்றே சொல்ல வேண்டும்.
அதுவும் இயக்குனர் ஷங்கர் கெரியரில் மிகுந்த விமர்சனத்திற்கு ஆளான படமாகவும் இந்தியன் 2 படம் அமைந்தது. இந்த நிலையில் அடுத்ததாக ரஜினி நடிக்கும் வேட்டையன் படம் , அஜித்தின் விடாமுயற்சி படம் என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தே காத்திருக்கின்றன.
அதுவும் ஜெய்பீம் என்ற ஒரு மாபெரும் ஹிட் படத்திற்கு பிறகு நேராக த.ச.ஞானவேல் டைரக்ட் செய்யும் திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் அமைந்திருக்கிறது.

அதனால் ரஜினியை வைத்து என்ன விதமான கதையை ஞானவேல் தரப்போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் திரைப்படம் கூலி.
கூலி படத்தை லோகேஷ் இயக்கக்கூடிய இந்த படம் ஒரு பக்கா ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. படத்தின் டைட்டில் டீசரே ரிலீசாகி ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள்? என்பதை பற்றி பல தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.
முதலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனா நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் ரஜினிக்கு வில்லன் என்றதும் நாகர்ஜூனா நடிக்கமாட்டேன் என்றுகூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்போது கிடைத்த செய்தியின் படி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஃபகத் பாசில் நடிப்பதாக இருந்ததாம்.
ஃபகத்தும் லோகேஷுக்கும் பிரச்சினையா? அல்லது Production தரப்பில் ஃபகத்துடன் பிரச்சினையா என்று தெரியவில்லை.ஆனால் சில கருத்து வேறுபாட்டின் காரணமாகத்தான் ஃபகத் பாசில் இந்தப் படத்தில் இருந்து விலகி கொண்டார் என்று கோடம்பாக்கத்தில் சொல்லி வருகிறார்கள்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here