Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

Actress Rani: சோகங்கள் நிறைந்த சீரியல் வில்லி நடிகை ராணியின் கதை தெரியுமா?

Tamil Serials: சொர்க்கம் என்னும் சீரியலில் நடித்தேன். அப்போது அதில் மௌனிகாவை டார்ச்சர் பண்ணும் காட்சிகள் இருந்தது. வெளிப்புறத்தில் ஒரு கோயில் அருகே அந்த சீரியலில் படப்பிடிப்பு…

Tamil Serials: சொர்க்கம் என்னும் சீரியலில் நடித்தேன். அப்போது அதில் மௌனிகாவை டார்ச்சர் பண்ணும் காட்சிகள் இருந்தது. வெளிப்புறத்தில் ஒரு கோயில் அருகே அந்த சீரியலில் படப்பிடிப்பு நடந்தது. மௌனிகாவை டார்ச்சர் செய்வியா என கேட்டு ஒரு ஊரே திரண்டு என்னை அடிக்க வந்தார்கள். நான் காரினுள் சென்று ஒளிந்துக்கொண்டேன். மேலும் பல சீரியல்களில் நான் வில்லியாகவே நடித்தேன் என ராணி தெரிவித்துள்ளார்.

நடிகை ராணி: சின்னத்திரையில் வரும் சில கதாபாத்திரங்களுக்கு இந்த நடிகை தான் சரியாக இருப்பார்கள். அவரை போட்டிருக்கலாம் என நம்மையே சில பிரபலங்கள் யோசனை செய்ய வைத்து விடுவார்கள். அதில் ஒருவர் தான் நடிகை ராணி. அலை என்ற சீரியல் வாயிலாக நடிப்பில் அறிமுகமான அவர், “சொந்தம், அத்திப்பூக்கள், சந்திரலேகா, வள்ளி, முன் ஜென்மம், பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, குல தெய்வம் மற்றும் ரோஜா” என அநேக சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களுக்கு என தனி இலக்கணம் வகுத்தவர் என்றே கூறலாம். அந்தளவுக்கு மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டி மக்களிடம் அன்பையும், வெறுப்பையும் ஒரே சமயத்தில் சம்பாதித்து கொண்டவர். இவர் கடந்த வந்த வாழ்க்கை ரொம்பவும் கடினமான ஒன்று. அதனைப் குறித்து பார்க்கலாம்.

நேர்காணலில் நடிகை ராணி தன்னுடைய சோகங்கள் நிறைந்த கடினமான வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, “என்னுடைய அம்மா தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். அவர் என்னை சின்ன வயதிலேயே ட்யூன் செஞ்சு வைத்து விட்டார். எதில் என்றாலும் ஒரு கரெக்ட்டான பங்களிப்பு இருக்க வேண்டும் என சொல்லிக்கொடுத்தார். அதுதான் சீரியலில் நடிப்பதற்கு காரணமாக அமைந்தது. ஆனால் நான் Collage படித்துக்கொண்டு இருக்கும்போது அம்மா இறந்து விட்டார். வீட்டில் சகோதரிகள் இருந்ததால் நான் Collage படிக்கும்போதே கல்யாணம் பண்ணிக்கொண்டேன். இதனால் என்னால் டிகிரி கூட படிக்க முடியாமல் போனது. மகன் பிறந்த பிறகு தான் சீரியலில் நடிக்க தொடங்கினேன். நான் இப்போது வரை நடிக்க கடவுளின் அருள் தான் அணைத்துக்கும் காரணம் என நினைக்கிறேன்.

Advertisements

அதே நேரம் என்னுடைய அப்பா என் வாழ்க்கையில் படிப்பு, திருமணம், பிள்ளைகள் என எதையும் பார்க்கவில்லை. நான் ஸ்கூல் படிக்கும்போதே அவர் இறந்து விட்டார். எல்லாரும் முடிந்த அளவு அப்பா, அம்மாவுடன் இருக்க வேண்டும். அவர் இருந்திருந்தால் நாங்கள் எல்லோரும் சினிமாவில் இருந்திருப்போம். நிச்சயமாக சீரியலில் நடித்திருக்க மாட்டோம். அப்பா இல்லாததால் விரைவில் எல்லோருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள்.

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சொர்க்கம் என்ற சீரியலில் நடித்தேன். அப்போது அதில் மௌனிகாவை டார்ச்சர் பண்ணும் காட்சிகள் இருந்தது. வெளிப்புறத்தில் ஒரு கோயில் அருகே அந்த தொடரின் ஷூட்டிங் நடந்தது. மௌனிகாவை டார்ச்சர் செய்வியா என கேட்டு ஒரு ஊரே சேர்ந்து என்னை அடிக்க வந்தார்கள். நான் காரில் போய் மறைந்துக்கொண்டேன். மேலும் நான் பல சீரியல்களில் வில்லியாகத்தான் நடித்தேன். அந்த நெகட்டிவ் ரோல்களுக்காக நான் ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை. எந்த கதாபாத்திரம் என்றாலும் அதில் நான் ராணி மாதிரி தெரிய வேண்டும் என நினைப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here