தள்ளி போகிறதா கங்குவா? : மௌனம் காக்கும் சூர்யா

0
162

“ஜெய்பீம்” த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘வேட்டையன்’. மல்டி ஸ்டார் படமாக உருவாகியிருக்கிறது. 

இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருமென அறிவித்துள்ளனர். 

அதேநாளில் சூர்யா, சிவாவின் கூட்டணியில் பிரமாண்டமாக உருவான ‘கங்குவா’ படமும் திரைக்கு வருகிறது என அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர். 

சூர்யாவின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படம் என்றும், 20 மொழிகளில், 3டி தொழில்நுட்பத்திலும் வெளி வருகிறது.

கடந்த சில நாட்களாக இப்படி ஒரு தகவல் இருக்கு. திட்டமிட்டபடி படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வரும் என்ற இலக்கில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதே சமயம் இன்னொரு பக்கம் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஓவர்சீஸ் பிசினஸ், தெலுங்கு படவுலகினர் எனப் பல தரப்பினரிடமும் ‘அக்டோபர் 10’ வெளி வருவது குறித்துத் தயாரிப்பாளர் கலந்துபேசி வருகின்றனர். எல்லாரிடமும் பேசிய பின்னர், இறுதியான முடிவு எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். 

இருப்பினும், திட்டமிட்டபடி அக்டோபர் 10ஆம் தேதி ‘கங்குவா’ படம் வெளியாகாது என்றும் தீபாவளியையொட்டி அப்படம் வெளியாகலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பழங்கால கதையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள கக்குவா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here