‘நந்தன்’ படத்துக்குப் பிறகு சசிகுமார் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.

இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டெர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கிறது.
சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.
படத்தை அபிஷன்ஜீவிந்த் எழுதி, இயக்கி வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லரை பொறுத்தவரை தொடக்கமே காமெடியாகவும், அடுத்தடுத்த காட்சிகள் இலங்கை தமிழர்களின் வலியையும், வேதனையையும் பதிவு செய்கிறது. இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here