இந்த வாரம் வெளியே போக தாயராகும் நடிகர் ரஞ்சித் : குறைந்த வாக்குகள் பெற்று ஏமாற்றம்

0
112

பிக் பாஸ் சீசன் 8ல் நிறைய பிரபலங்கள் உள்ளே போகவில்லை என்றாலும், போனவர்கள் அனைவரும் சர்ச்சைக்கு பெயர் போனவர்கள் தான்.

சர்ச்சை பிரபலங்கள் :

நடிகர் ரஞ்சித், தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர் அர்ணவ், தொகுப்பாளினி ஜாக்குலின் என பல சர்ச்சை பிரபலங்கள் இருக்கிறார்கள். இவர்களில் முதல் ஆளாக மகாராஜா பட நடிகை சஞ்சனா வெளியேறி விட்டார். அவரை தொடர்ந்து இந்தவாரம் முதல் வாரம் என்றாலும் எலிமினெசன் இருக்கும் என்று விஜய் சேதுபதி சொல்லிவிட்டார்.

 ரவீந்தரா? ரஞ்சித்தா?

இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷனில் ரவீந்தர், ஜாக்குலின் அதிக வாக்குகளுடன் நாமினேட் ஆன நிலையில், அடுத்ததாக ரஞ்சித், செளந்தர்யா, முத்துக்குமரன் மற்றும் அருண் பிரசாத் உள்ளிட்டோர் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த 6 பேரில் இந்த வாரம் எலிமினேட் ஆகப் போவது ரவீந்தரா? ரஞ்சித்தா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஜாக்குலினை எப்படியும் விஜய் டிவியே காப்பாற்றி விடும் என்று கூறுகின்றனர். இதில் ரஞ்சித் அவர்களுக்கு மிக குறைந்த மக்கள் வாக்குகளே கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here