தமிழ்நாட்டில் வேட்டையன் படுஜோரான ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, மஞ்சு வாரியர்,பகத்பாசில், அமிதாப் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
வேட்டையன் படத்தை சில தமிழ்சினிமா பிரபலங்கள் இரகசியமாக பார்த்து ரசித்தனர்.
அந்த வகையில் காலை 9 மணிக்கு வேட்டையன் படத்தின் முதல் காட்சி சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் தனுஷ் கண்டு களித்தார். அது போல் இசையமைப்பாளர் அனிருத்தும் தனுஷுடன் படம் பார்த்தார்.

இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் விஜய் அவர்களும் “வேட்டையன்” படத்தை பார்த்தார். அவர் அண்ணா சாலையில் உள்ள தேவி தியேட்டரில் வேட்டையன் படத்தை கண்டு மகிழ்ந்தார். விஜய் தலையில் தொப்பி அணிந்து கொண்டு, முகத்தில் முகமூடி போட்டுக் கொண்டு வந்திருந்தார். அவர் சினிமா பார்த்துவிட்டு காரில் ஏறிச் சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒருபக்கம்” வேட்டையன்” படத்திற்கு பாசிடிவ் ரீவூ கிடைத்து, தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் முதல் நாளே கூட்டம் குறைவு தான் என்றாலும், மெல்ல, மெல்ல கூட்டம் அதிகரித்து இந்த ஆண்டின் சிறந்த படமாக இருக்கும் என்றும் தியேட்டர் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here