வேட்டையன் படத்தை கழுவி ஊத்தும் விஜய் ரசிகர்கள் : களத்தில் குதித்த வலைப்பேச்சு அந்தணன்

0
138

வேட்டையன் படத்தை விஜய் ரசிகர்கள் வேண்டும் என்றே படத்தை பற்றி குறை கூறி வந்த நிலையில், படம் சூப்பராக இருப்பதாகவும், படத்தி8ற்கு முழு ஆதரவையும் தந்துள்ளார், சினிமா விமர்சகர் அந்தணன்.

சினிமா விமர்சகரான அந்தணன் நிறைய தமிழ் சினிமா படங்களை கழுவி, கழுவி ஊற்றியுள்ளார். ஆனால் ஆனால் தற்போது தியேட்டர்கள் வெளியாக்கி சக்கைப் போடு போட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் “வேட்டையன்” படத்திற்கு வலைப்பேச்சு அந்தணன் அவர்கள் நல்ல விதமாக விமர்சனம் செய்துள்ளார். படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதாக அவர் கூறியுள்ளார்.

யூடிப் சேனலில் அந்தணன் பேசியது:- ஆயுத பூஜை, விஜயதசமிக்கு ரஜினிகாந்த் படத்தை பார்க்கும் குடும்ப ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாற்றத்தான் போகின்றனர். 

வேட்டையன் திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கத்தான் போகிறது. 

அதை யாருமே தடுக்க முடியாது என்று அந்தணன் தனியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்போது வேட்டையன் படத்துக்கு தனது முழு ஆதரவை அளித்துள்ளார்.

வேட்டையன் வசூல்: ரஜினிகாந்தின் வேட்டையன் வசூல் முதல் நாளில் 70 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டியிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், நிச்சயம் இந்த விடுமுறை நாட்களில் தொடர்ந்து படம் மிகப்பெரிய கலெக்‌ஷனை அள்ளும் என்றும் அந்தணன் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் ரசிகர்கள் வேட்டையன் படத்தை வெறித்தனமாக கொண்டாட ஆரம்பித்துள்ள நிலையில், அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் டாலர் வசூலை வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் பெற்றுள்ளதாக கூறுகின்றனர். அதாவது இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here