பிக் பாஸ் சீசன் 9 வீட்டில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக பழைய போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது இந்நிகழ்ச்சியின் 9வது சீசன் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த சீசனில் 20 பேர் பங்கேற்று இருந்தனர். தற்போது ஐந்து போட்டியாளர்கள் வெளியேற புதியதாக பிரஜன், சான்றா, அமித் பர்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே களம் இறங்கி நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்டியுள்ளனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய டாஸ்க் தொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது “ஆஹா ஓஹோ ஹோட்டல்” என்ற ஹோட்டல் டாஸ்கி ஸ்பெஷல் கெஸ்ட்டாக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா தேஷ்பாண்டே, மஞ்சரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அது தொடர்பான புரோமோக்களை விஜய் தொலைக்காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறது. அது தற்போது வைரலாகி வருகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


