தமிழ் சினிமாவில் துணை நடிகையான நடிகை விசித்ரா, நடிகை ராதிகா குறித்து பேசியது தற்போது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் கவுண்டமணி உள்ளிட்ட திரைப் பிரபலங்களுடன் நடித்தவர நடிகை விசித்ரா. ஆனால், பிக்-பாஸ் என்னும் விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

தற்போது நடிகை விசித்ரா யூடிப் சேனல்களில் சினிமா நடிகைகள் குறித்து அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேச வருகிறார். அத்துடன் சினிமாவில் உள்ள அட்ஜஸ்ட்மென்ட் விவகாரங்கள் குறித்து ஒப்பன் டாப் ஆக பேசி வருகிறார்.
தற்போது நடிகை விசித்ரா யூடிப் சேனல் ஒன்றிற்கு நடிகை ராதிகா அவர்கள் பற்றி பேசியது, பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. அவர் பேசியதாது, நடிகை ராதிகாவின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து சில செய்திகள் வெளியாகி வருகின்றன. பத்திரிகையாளர்கள், அதனை தவிர்க்க வேண்டும். தற்போது சமூக வலைத்தளங்களில் கூட நடிகைகளின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்தும் பேசப்படுவது, அபத்தம் என்றும், அதனை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், சினிமா பிரபலங்கள் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here