தமிழில் நீங்க தா, ஆனா தெலுங்குல சூர்யா தானாம்… வெளுத்து வாங்கிய ‘கங்குவா’

0
95

ரஜினி, விஜய் படங்களை சூர்யாவின் கங்குவா படம் முறியடித்துள்ளது தான் கோலிவுட் சினிமாவில் ஹாட் டாப்பி-க்காக பேசப்படுகிறது.

வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கு சினிமா உலகில் தனி மார்க்கெட் உருவாகியுள்ளது. இதனால் தற்போது சூர்யாவின் கங்குவா படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கங்குவா திரைப்படத்திற்கு தென்னிந்தியாவில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படம் பல ஆண்டுகளாக பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருவழியாக இந்த மாதம் திரைக்கு வரவுள்ளது. சூர்யா ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாட தயாரா உள்ளனர். இருப்பினும், சூர்யாவின் கேரியரில் இது ஒரு முக்கிய படமாக பார்க்கப்படுகிறது.கங்குவா திரைப்படம் பாகுபலி ரேஞ்சுக்கும் இருக்கும் என கூறப்படுவதால் அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் சூடுபிடித்துள்ளது.

தெலுங்கு மாநிலங்களில் ரஜினி.விஜய், போன்ற நடிகர்களுக்கு மவுசு அதிகம் இருக்கும். இதை கருத்தில் கொண்டு விஜய்யின் கோட் பட தெலுங்கு ரிலீஸ் உரிமை ரூ.17 கோடிக்கும், ரஜினியின் வேட்டையன் பட தெலுங்கு உரிமை ரூ.16 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த இரண்டு படங்கள் தான் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் தெலுங்கு உரிமை அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட படமாகும். இதை முறியடிக்கும் விதமாக தற்போது கங்குவா படத்தின் தெலுங்கு உரிமை ரூ.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கோட் மற்றும் வேட்டையன் பட சாதனையை கங்குவா படம் அசால்டாக முறியடித்து உள்ளது. நேற்று கூட கங்குவா படத்தின் ப்ரோமோசன் நடைபெற்ற குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here