கவர்ச்சி காட்ட தயங்காத சூர்யா பட நடிகை : கிளாமர் தான் முக்கியமா?..

0
90

நடிகர் சூர்யா பட கவர்ச்சி நாயகி ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதற்காக தனது படுகவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நடிகை திஷா பதானி தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் சூர்யாவுடன் “கங்குவா” படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார்.

திரையில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காத நடிகை திஷா பதானி. தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மேலும் பார்ட்டி, கேளிக்கை விடுதி, குத்தாட்ட போடும் நிகழ்ச்சி என்றால் முதல் ஆளாக கவர்ச்சியான உடைகளில் சென்று அங்கு அமர்க்களம் செய்வது, மது விருந்தில் கலந்து கொள்வது என தனது ஜாலி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார் நடிகை திஷா பதானி.

நடித்த படங்கள்:-

பாலிவுட் சினிமாவில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவர் கடந்த ஆண்டு 3 படங்களில் நடித்திருந்தார். அதன்படி, பிரபாசுடன் கல்கி 2898 ஏடி, சூர்யாவுடன் கங்குவா மற்றும் சித்தார்த் மல்கோத்ராவுடன் யோதா ஆகிய படங்கள் ஆகும்.

பாலிவுட் வாய்ப்பு:-

தற்போது, இவர் பாலிவுட்டில் ‘வெல்கம் டு தி ஜங்கிள்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், புகைப்படம் ஒன்று வெளியாகி திஷா பதானி ஹாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அதன்படி, பாஸ்ட் அண்ட் பியூரியஸ்” நடிகர் டைரஸ் கிப்சன் மற்றும் நடிகர் ஹாரி குட்வின்ஸுடன் திஷா பதானி இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் மூலம் ஹாலிவுட் வெப் தொடர் ஒன்றில் திஷா பதானி நடித்து வருவதாக தெரிகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here