பிரபல நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான கலைப்புலி ஜி.சேகரன் இன்று காலமானார். அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திரைப் பயணம் பயணம்:-
கலைப்புலி பிலிம்ஸ் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் ஜி.சேகரன். இவர் கலைப்புலி எஸ்.தானு அவர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களை விநியோகம் செய்துள்ளார்.
‘யார்?’ படத்தின் மூலமாக தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகம் ஆனார். ‘ஊரை தெரிஞ்சுகிட்டேன்’, ‘காவல் பூனைகள்’, ‘உளவாளி’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
‘ஜமீன் கோட்டை’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதனைத்தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டில் ‘கட்டுவிரியன்‘ என்ற படத்தை இயக்கி, இசையமைத்து இருந்தார்.
சிறுநீரக பிரச்சனை :
கடந்த சில ஆண்டுகளாக சேகரனின் உடல்நிலை மோசமடைந்து அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சிறுநீரக பிரச்சனை காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இதனால், வீட்டில் ஓய்வில் இருந்த அவருக்கு திடீரென்று மீண்டும் உடல்நிலை மோசமடைந்தது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டார். அவரின் வயது 73.
அவரது மறைவுக்கு பல்வேறு திரைப் பிரபலங்கள், திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள், விநியோஸ்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here