நடிகர் பிரசாந்த் நடிகை பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகிய அந்தகன் திரைப்படம் வருகிறது 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது, இது சம்பந்தமாக திருச்சியில் நடிகர் பிரசாந்த் மற்றும் பிரியா ஆனந்த் 2 பேரும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
த்ரில்லர் மற்றும் காமெடி கலந்த படம் என்றும், தமிழில் முதன் முறையாக ஜீன்ஸ் படம் தான் ஃபான் இந்தியா படமாக வெளியானது..அதுபோன்று தற்போது எந்த படம் எடுத்தாலும் அது எல்லா மொழிகளிலும் வெளியாகிறது, இந்த படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே குவிந்து இருப்பதுடன் சிரமம் எடுத்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறோம்..
350 முதல் 400 தியேட்டர்களில் படம் வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும், இந்த படத்தில் கண்பார்வையற்ற நபராக மிகுந்த சிரமம் பட்டு நடித்துள்ளேன் பாடல் காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டு இருப்பதுடன் இப்படம் மக்களிடம் சிறப்பாக சென்றடையும் என எதிர்பார்ப்பதாக கூறினார். திரைப்பட ரிவ்யூ கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும், டைரக்டர் சங்கர் கதைக்கேற்ப நான் தேவைப்பட்டால் நிச்சயம் மறுபடியும் டைரக்டர் சங்கருடன் இணைந்து நடிப்பேன் என நடிகர் பிரசாந்த் கூறினார்.
தற்போது ஆடியன்ஸ் பல்ஸ் மாறிடுச்சு, முன்பு ஆக்சன் மற்றும் லவ் படங்கள் அதனை பின் தொடர்ந்து நடித்து வந்தோம். 5 ஆண்டுகளுக்கு முன்பு கதை மையமாக இருந்தது தற்போது ஸ்கிரீன் பிளே மையமாக இருக்கிறது.. நல்ல திரைக்கதை உள்ள கதை நல்ல வெற்றியை அடைகிறது அதுபோன்ற கதையை தான் எதிர்நோக்கி இருக்கிறோம். பெரிய பட்ஜெட் படம் அல்லது சிறிய பட்ஜெட் படம் என்பதை மக்கள் பார்ப்பதில்லை கதை மற்றும் திரைக்கதை நன்றாக இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கிறது, மக்களுக்கு பிடிக்கும் வகையில் ரொமான்ஸ் மற்றும் தத்துவம், மெலோடிஸ் பாடல்கள் இருக்கிறது. காலத்திற்கு தகுந்தபடி, டெக்னாலஜியும் மாறிக்கொண்டிருக்கும் சமயம் ஓடிடி தளங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்

ரீல்ஸ் மோகத்தில் இன்றைய இளைஞர்கள்:
ரீல்ஸ்ல நீங்களே கேமராமேன், நடிகர், இயக்குனர் ஆகலாம் என்ற பட்சத்தில் கிரியேட்டிவிட்டியை வெளியில் கொண்டுவர ஒரு வாய்ப்பாக உள்ள நிலையில், ரீல்ஸ் செய்யும் போது பாதுகாப்புடன் அதே நேரம் மற்றவர்களுக்கு பாதிப்பு உண்டாகாத வகையில் இருக்க வேண்டும் என இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார். தமிழகம் முழுவதும் ஹெல்மெட் பற்றிய அவேர்னெஸ் அதிகம் செய்து வருகிறேன், இலவசமாக ஹெல்மெட் கொடுத்து வருகிறேன், தயவுசெய்து ஹெல்மெட் போட்டு கொண்டு வாகனம் ஓட்டவும், அது உங்களது குடும்பத்திற்கும் உங்களுக்கும் முக்கியம், அவசரமாக வாகனத்தை ஓட்ட வேண்டாம், உங்களுக்கு குடும்பம் இருக்கிறது அதனை கருத்தில் வைத்து கொண்டு பாதுகாத்துடன் ஹெல்மெட் போட்டு கொண்டு பயணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
தி கோட் படம் ஒரு சிறப்பான படம், 3 ம் தேதி இந்த படம் குறித்த அப்டேட் வர போகிறது..
இதனை நானும் இந்த படத்தை எதிர்நோக்கி ஆவலுடன் ஒரு ரசிகனாக காத்திருக்கிறேன், விஜய் தி கோட் திரைப்படத்திற்கு வேற லெவல் எக்ஸ்பிரஷன் இருக்கும். நடிகர் விஜய்க்கு End இருக்காது, அவரது சகோதரராக அவரது நலம் விரும்பியாக அவரது வெற்றிக்கு வாழ்த்துக்களை சொல்வதாக தெரிவித்தார். நடிகர் விஜய் அரசியல் தான் என தேர்வு செய்துள்ளது நல்ல விஷயம், யார் மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன், அது யாராக இருந்தாலும் சரி என தெரிவித்தார்.
தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது :
திருட்டு வீடியோ என்பது சினிமா துறையை சீரழிக்கும் விதமாக இருக்கிறது. தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது செய்திருப்பது நல்ல செயல், இதுபோன்று வெளியாகும் படங்களை பார்க்காமல் இருப்பது நல்லது. தற்போதைய இளைய சமூகத்தினர் பல விஷயங்களை படித்து இருப்பது என்பது சந்தோஷமான ஒன்று, இளம் நடிகர்கள் நன்றாக நடித்து உங்களது திறனை வெளிகாட்டுங்கள் என வாழ்த்தினார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here