வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனர் ஐசரி கணேஷன் அவர்கள் தயாரிப்பில் ஆர்.ஜே பாலாஜி அவர்கள் எழுதி, இயக்கி, நடித்த படம் மூக்குத்தி அம்மன்.

இந்த படம் கொரோனா காரணமாக தியேட்டர்களுக்கு வராமல் நேரடியாக ஓ.டி.டி-க்கு வந்தது. “மூக்குத்தி அம்மன்”” படம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் அம்மனாக நடிகை நயன்தாரா நடித்தது மக்களை கவர்ந்தது மக்களும் அம்மனாக நடிகை நயன்தாரா அவர்களை ஏற்றுக் கொண்டனர்.


முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்பாகத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சுந்தர் சி இயக்குகிறார்.


இப்படத்தின் பூஜை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், நடிகைகள் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா, மீனா, குஷ்பூ, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களே இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் பூஜை ரூ. 1 கோடி செலவில் நடைபெற்றதாகவும் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய மொழிகளில் உருவாகவுள்ளதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.


நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் துனியா விஜய், ரெஜினா கேசண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.
பொதுவாக சுந்தர்.சி படகள் என்றாலே இரண்டு, மூன்று நடிகைகள் நடிப்பார்கள். இந்தப் படத்தில் வேற மீனா நயன்தாரா முக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here