விஜய் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் அஜித் படம் : ரசிகர்களின் கொண்டாட்டத்தில் குட் பேட் அக்லி!..

0
118

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள “குட் பேட் அக்லி” படம் தியேட்டர்களில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளியானது.

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘குட்பேட் அக்லி’ திரைப்படம்  உலகம் முழுவதும் வெளியானது.

நடிகர் விஜய் அவர்கள் ஜனநாயகன் படத்துடன் இனி சினிமாவில் நடிக்க போவதில்லை முழு நேர அரசியல் மட்டும் தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். இதனால் நடிகை அஜித்குமார் அவர்களுக்கு போட்டியே இனி இல்லை என்று பேசப்பட்டது. இதனால் நடிகர் அஜித்குமார் அவர்களின் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என்றும்,100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைக்கும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

நடிகர் விஜய் “ஜனநாயகன்” படம் தான் தனக்கு கடைசி படம் என்றும் இனி சினிமாவில் நடிக்கப் போவது இல்லை முழு நேர அரசியல் மட்டும் தான் என்று அவர் அறிவித்து விட்டார். இதனால் விஜய் ரசிகர்களும் “குட் பேட் அக்லி” படத்தை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிட்டுத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here