வியக்க வைக்கும் புஷ்பா பட நாயகனின் சொத்து மதிப்பு.. தனி விமானம், ரோல்ஸ் ராய்ஸ் என கலக்கி வரும் அல்லு அர்ஜுன்

0
503
Astounding Pushpa film hero net worth
Astounding Pushpa film hero net worth

Astounding Pushpa film hero net worth : தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள அல்லு அர்ஜுன் தனது 42வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். சிறுவயதிலேயே சினிமாவில் நடித்து வரும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஹிட் கொடுக்கிற வகையில் படங்கள் அமைந்து வருகிறது.

Astounding Pushpa film hero net worth
Astounding Pushpa film hero net worth

அந்த வகையில் அல்லு அர்ஜுன் கேரியரில் சிறந்த ஒரு படம் தான் புஷ்பா. இந்த படமானது சுகுமார் இயக்கத்தில் உருவானது. இதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் மிரள வைத்து இருப்பர் . அவரது பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீசர் ரிலீசாகி இருந்தது.

இப்படம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாக போகிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் ஒரு படத்திற்கு சுமார் 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.அல்லு அர்ஜுனுக்கு விளம்பரங்களில் நடிக்க 4 கோடி வரை கிடைக்கிறது.

இதையும் படிங்க : கெளதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா கதையை இவருக்காகத்தான் எழுதினாராம்.

450 கோடி அளவில் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு | Astounding Pushpa film hero net worth

அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத்தில் சொகுசு பங்களா உள்ளது. அதன் மதிப்பு மட்டும் சுமார் 100 கோடி ஆகும். மேலும் அல்லு அர்ஜுன் 80 கோடி அளவில் சொந்தமான பிரைவேட் ஜெட் வைத்து உள்ளார் . 450 கோடி மதிப்பில் அல்லு அர்ஜுனுக்கு சொத்து மதிப்பு இருக்கிறது.

மேலும் கார் மீது அதிகம் ஆர்வம் கொண்டஅல்லு அர்ஜுன் 5 வகையான கார்களை வைத்திருக்கிறார். ஏழு கோடி மதிப்பிலான ஃபால்கான் என்ற வேனிட்டி வேன் வைத்திருக்கிறார். மேலும் 1.78 கோடி மதிப்பில் ரேஞ்ச் ரோவர் மற்றும் 6.5 கோடி மதிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் உள்ளது.

மெர்சிடிஸ், ஜாகுவார் 99 லட்சம் மற்றும் ஹம்மர் 75 லட்சம் உள்ளிட்ட கார்களும் அல்லு அர்ஜுனனிடம் இருக்கிறது. தொடர்ந்து ஹிட் படங்கள் தந்த வசூல் மன்னனாக புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here