சீரியல்களில் வில்லி நடிகையாக பிரபலமான நடிகை சூசனை ஞாபகமிருக்கா? தனது தனித்துவமான நடிப்பால் தனக்கான ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி கொண்டவர் நடிகை சூசன்.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பான சுழியம் சீரியலின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார் சூசன். அதனை தொடர்ந்து தென்றல், ஆபிஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தனது வில்லத்தனமான நடிப்பினால் பெயர் பெற்ற நடிகை சூசன் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்.
சூசன் என்று சொன்னாலே பல பேருக்கு நினைவுக்கு வரக்கூடிய முதல் விஷயம் மைனா திரைப்படத்தில் ஜெயிலரின் மனைவியாக அவர் மிரட்டிய நடிப்பு தான்.
“எப்போ வரீங்க.. எப்போ வரீங்க..” என இந்த ஒரு வசனத்தின் மூலம் சூசன் இன்றளவும் ஃபேமஸ்.. சின்னத்திரையில் வில்லி நடிகையாக கலக்கி வந்த சூசன் வெள்ளித்திரையிலும் வில்லிதனமான நடிகையாக களமிறங்கினார்.

மைனா படத்தை தொடர்ந்து நர்த்தகி, பேச்சியக்கா மருமகன், ரட்சகன் மற்றும் ஜாக்பாட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திறமைகளிருந்தும் அவரால் வெள்ளித்திரையில் எதிர்பார்த்தது போல ஜொலிக்க முடியவில்லை.

பல சீரியல் வாய்ப்புகள் வந்தும், திடீரென சூசன் நடிப்பை விட்டு விலகிச்சென்றார்..மைனா பட பிரபலம் சூசன் என்னவானார் என்று ரசிகர்கள் விசாரித்து வருகின்றனர்.
தற்போது குடும்பம், கணவர் என செட்டில் ஆகிவிட்ட நடிகை சூசன் மகனுடன் எடுத்து கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. நடிகை சூசனுக்கு இவ்வளவு பெரிய மகனா என ரசிகர்கள் ஷாக்கில் உறைந்துள்ளனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here