தமிழ் சினிமாவின் இளம் ஹிட் டைரக்டரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர் ஹிட் படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் உச்ச நட்சத்திர நடிகர் ஷாருக்கானை வைத்து ஜாவான் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்நிலையில், அட்லீயின் இந்த படத்தையும் நெட்டிசன்ஸ் வழக்கம் போலவே ட்ரோல் செய்து வந்தார்கள். அதன்படி, ஜவான் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல்வேறு திரைப்படங்களில் இடப்பெற்ற சீன்களை பிட்டு பிட்டாக சுட்டு அதை தான் படம் எடுத்து வைத்து இருந்ததாக சொல்லப்பட்டது. குறிப்பாக இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸின் படத்தில் உள்ள நிறைய ஸீன்கள் சுடப்பட்டிருப்பதாக நெட்டிசன்ஸ் கண்டுபிடித்து கலாய்த்தனர்.

இதை ஏற்றுக் கொள்ள முடியல என்றாலும், அட்லீ இந்திய சினிமாவில் முன்னணி டைரக்டராக ஆகிவிட்டார் என்பது உண்மை. அதாவது, அட்லீ டைரக்ட் செய்த ஜவான் படம் உலகம் முழுவதும் ரூ.1100 கோடிகள் வசூல் செய்து, அட்லீயை பிரம்மாண்டமான உயரத்தில் அமர வைத்துள்ளது.
இந்நிலையில், அட்லீ அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றை இயக்கம் போவதாகவும், இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், அட்லீ தற்போதுயெல்லாம் தமிழ்நாடு பக்கம் வருவதே கிடையாதாம். மும்பையிலேயே ஒரு பிரம்மாண்ட அலுவலகம் வைத்து அங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அட்லீ என்னதான் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்தாலும், அவருடைய படங்களின் காட்சிகள் பல படங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதை தவிர்க்க முடியாது.

அதிலும், ஜவான் படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி இவர் சுட்டதெல்லாம் ரசிகர்களே மறந்து விட்டனர். அந்த அளவுக்கு இருந்தது, இது ஒரு புறம் இருக்க இன்று இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய இயக்குனராக அட்லீ வளர்ந்து விட்டார். அதாவது, அவரது சம்பளம் சுமார் 30 கோடிகள் வரை உயர்ந்துள்ளது. இவரது சொத்து மதிப்பு 60 கோடிகள் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கும் கூடுதலாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தற்போது, அட்லீ தன்னுடைய அடுத்த பட கதையை தயார் செய்துவிட்டு படத்தை டைரக்ஸன் செய்ய உள்ளார். அட்லீ தன்னுடைய அடுத்த படத்தை புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுனை ஹீரோவாக வைத்து இயக்க உள்ளாராம். விரைவில், இந்த படத்தை தயாரிப்பதில் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், அட்லீ இந்த திரையுலகில் இதுவரை யாரும் வாங்காத மிகப்பெரிய தொகையை சம்பளமாக தந்து, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தை தயாரித்து வரும் நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரராக விளங்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் கல்யாணம் வருகிற ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது, கல்யாணத்தின் சங்கீத் நிகழ்ச்சியில், அட்லீ மற்றும் பிரியா அட்லீ வித்தியாசமான வண்ண உடையில் வந்துள்ளார். திருமண விழாவிற்கு இப்படியா டிரஸ் போடுவது? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here