இந்த பதிவில் நடிகர் விக்ரமின் சொத்து விபரம் பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம்.
நடிகர் விக்ரம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பிரபலமான நடிகர் விக்ரம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நடிகர் ஆவார்.

இவரது விடாமுயற்சி, கடின உழைப்பு தற்போது படங்கள் அடுத்தடுத்து குவிந்து கொண்டு வருகின்றது. ஆரம்பத்தில் இருந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் விக்ரமின் சில படங்கள் தோல்வி கண்டாலும் அவர் துவண்டு போனதில்லை.
மீண்டும் மீண்டும் தனது திறமையினை வெளிக்காட்டி ரசிகர்களைக் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறார்.விக்ரம் ‘சேது’ படத்தில் சியான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததால் சியான் விக்ரம் என்ற பெயர் வந்தது.
ஒரு படத்துக்காக அதன் கதாநாயகன் எந்த அளவு உடலை மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு மாற்றி திரையில் ரசிகர்களை அசத்தக்கூடியவர், விக்ரம்.
தற்போது 58 வயதானாலும் இவர் இளமையாகவே காணப்படுகின்றார். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு படத்திற்கு ரூ. 25 கோடி முதல் ரூ. 35 கோடி வரை சம்பளம் வாங்கும் விக்ரமிற்கு, சென்னையில் சொந்தமாக சில வீடுகள் இருக்கிறது.
5 க்கும் அதிகமான சொகுசு கார்களை வைத்துள்ளதுடன், தற்போதைய நிலவரப்படி விக்ரமிற்கு சுமார் ரூ. 150 கோடி சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here