பிக்-பாஸ் நிகழ்ச்சியை வைத்து செமையா லாபம் பார்த்த விஜய் சேதுபதி : கோடியில் சம்பளம்

0
143

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்காக நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு கோடிக் கணக்கில் சம்பளம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக்-பாஸ் நிகழ்ச்சி என்றாலே நடிகர் கமல்ஹாசன் தான். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மக்கள் மனதில் பதிவு செய்துள்ளார். இருப்பினும் அடுத்த வருடம் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் திமுக ஆதரவுடன் ராஜ்ய-சபா எம்.பி-யாக உள்ளார். அதற்காக முன்கூட்டியே பிக்- பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிக்-பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சினிமாவில் பேசப்படும் தொகையை விட பல மடங்கு அதிகமாக சம்பளமாக பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. 10 கோடி ரூபாய் அளவிற்கு சம்பளம் பேசப்பட்டு இருக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசு வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் அவர்களை விட, நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சிறப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக தற்போது பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here