Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு விலை போன இந்திய வீரர் : கைப்பற்றிய நடிகை ப்ரீதி ஜித்தா அணி

ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற -  பெருமையை இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். நடப்பாண்டில் அலி., தொடரில் ஸ்ரேயாஸ்…

ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற –  பெருமையை இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார்.

நடப்பாண்டில் அலி., தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இந்த நிலையில் மெகா ஏலத்தில் 3வது வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் ஏலத்திற்கு விடப்பட்டார். அப்போது கொல்கத்தா அணி அவரை மீண்டும் வாங்க கைகளை உயர்த்தியது. அவர்களுக்கு போட்டியளிக்கும் வகையில் பஞ்சாப் அணியும் ஏலத்தில் குதித்தது.

தொடர்ந்து ரூ.6 கோடிக்கு மேல் சென்ற போது கொல்கத்தா அணி விலகி கொள்ள, பின்னர் டெல்லி அணி ஏலத்தில் குதித்தது. இருவரும் ஸ்ரேயாஸ் ஐயருக்காக ரூ.15 கோடிக்கும் அதிக தொகையுடன் வாங்க போராடினர். தொடர்ந்து ரூ.17.50 கோடிக்கு ஸ்ரேயாஸ் ஐயரின் விலை எகிற, டெல்லி அணி அவருக்கு ரூ.18 கோடி கொடுக்க முன் வந்தது.

ஆனால் பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் ஐயரின் விலையை மீண்டும் அதிகரிக்க, அவரின் மதிப்பு ரூ.22 கோடிக்கும் அதிகமாக சென்றது. இதனையடுத்து ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க்கின் ரூ.24.75 கோடி என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் முறியடித்தார். அவரின் மதிப்பு ரூ.26 கோடி கொடுக்க டெல்லி அணி முன் வந்தது.

Advertisements

இறுதியாக பஞ்சாப் அணி ரூ.26.75 கோடி கொடுத்து பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் ஐயரை கைப்பற்றியது.

பஞ்சாப் அணி ரிஷப் பண்ட்-ஐ வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் பிடிவாதமாக வாங்கியுள்ளது. இதன் மூலமாக ரிக்கி பாண்டிங் – ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here

Related Latest News