கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் கொடுப்பதற்கு மனசு இருந்தாதான் அதற்கு மதிப்பு. ஆனால் அது போன்ற மனசு பெரும்பாலும் யாருக்கும் இருக்காது. அன்றாட வாழ்க்கையில் தின கூலியாக வேலை பார்த்து கஷ்டப்பட்டு வருபவர்கள் கூட, கஷ்டப்படுபவர்களை பார்த்தால் அவர்களால் முடிந்தளவு உதவி செய்துவிட்டு மன நிம்மதியை அடைந்து கொள்வார்கள்.

இதில் ஒருவராகத் தான் விஜய் டிவி கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பழக்கமான KPY பாலா பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இவருக்கு கிடைத்த பணத்தை வைத்து தானும் உண்டு மற்றவர்களுக்கும்உதவி செய்ய வேண்டும் என்கிற முறையில் சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1,000 ரூபாயை வழங்கி வந்தார்.
அடுத்த கட்ட த்திற்கு போகும் KPY பாலா, லாரன்ஸ்
இதனைத் தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வது, இயலாத பிள்ளைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தது, மேலும் மருத்துவ வசதி இல்லாத இடங்களில் ஆம்புலன்ஸ் வாங்கி தந்து பல உதவிகளை செய்து வருகிறார். இன்னும் இது போன்ற பல சிறந்த திட்டங்களை செய்ய வேண்டும் என்று நினைக்கும் இவருக்கு போதுமான பணம் இல்லாததால் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகவா லாரன்ஸ் இடம் உதவி கேட்டார்.
அவருக்கும் இந்த மாதிரி உதவிகளை செய்வது மிகவும் பிடித்தமான ஒரு செயல். அதனால் பாலா கேட்ட உடன் எந்தவித மறுப்பும் சொல்லாமல் கூடவே இருந்து தற்போது இருவரும் சேர்ந்து மாற்றம் என்கிற முறையில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். அப்படித்தான் KPY பாலா ஒரு முறை ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது அங்கே வியாபாரம் செய்யும் பெண் கஷ்டப்படுவதை பார்த்து உங்கள் ஆசை என்ன என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு நான் சொந்தமாக ஆட்டோ வாங்க வேண்டும். அதன் மூலம் என்னுடைய குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். உடனே அந்த பெண் ஆசைப்பட்டது போல ஆட்டோ வாங்கி தந்து கனவை நிறைவேற்றி இருக்கிறார். இதே போல் கஷ்டப்படும் பெண்கள் ஆட்டோ ஓட்டிக்கொண்டு அதன் கடனை அடைக்க போராடி கொண்டுள்ள பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் லாரன்ஸ் உடன் இணைந்து அவர்கள் அடைக்க வேண்டிய கடனை கொடுத்துவிட்டு அதற்கான பத்திரங்களை ஆட்டோ ஒட்டிய பத்து பெண்களுக்கு திருப்பி கொடுத்திருக்கிறார்.
இந்த வீடியோ அண்மையில் தான் வைரலாகி வெளிவந்தது. இப்படி இவர்கள் இருவரும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மக்களுக்கு நல்லது செய்து வருவதில் அதற்கு தகுந்த மாற்றம் வர வேண்டும் என்பதற்கு ஏற்ப அரசியலுக்கு அஸ்திவாரத்தை போடப் உள்ளார்கள். ஏற்கனவே நான் நல்லது மட்டுமே செய்ய விரும்புகிறேன் என்று தமிழக வெற்றிக்கழக கட்சியின் மூலம் விஜய் பயணித்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இவர்களுடைய நல்ல விஷயங்களை பார்த்த விஜய் அவர்கள் இருவருக்கும் போன் செய்து கூப்பிட்டு இருக்கிறார். சும்மா சாதாரணமாக செய்த உதவி இன்னும் அரசியல் செல்வாக்குடன் செய்தால் அதிக மக்களுக்கு உதவியாக இருக்கும். அத்துடன் அதற்கான பலன் வேற மாதிரியாக அமையும். அதனால் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் சேர்வதற்கு மிக விரைவில் அஸ்திவாரம் போட இருக்கிறார்கள்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here