போயஸ் கார்டனில் வீடு கட்டியது பற்றி தனுஷ் விளக்கம்..!

0
162

தனுஷின் 50 வது படம் ‘ராயன்’. இதில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ், சந்தீப்கிஷண், துஷாரா விஜயன் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை தனுஷ் இயக்கியத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்

இதன் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய தனுஷ் பேசியதாவது: ஒன்றுமே தெரியாமல் இருந்த என்னை நடிகனாக ஆக்கியது என் அண்ணனும் டைரக்டருமான செல்வராகவன். அவர்தான் என் குரு. அவர்தான் ஆசான். எனக்கு கிரிக்கெட் கற்று கொடுத்தது, சாப்பிடச் சொல்லி தந்தது, வாழ்வில் போராட சொல்லி தந்தது அவர்தான். குடிசை வீட்டில் வாழ்ந்த என்னை, போயஸ் கார்டனில் அமர வைத்திருப்பதும் அவர்தான்.

Dhanush explain house in Poise Garden

இதன் ஷூட்டிங்கில் மற்ற நடிகர்களுக்கு இரண்டாவது டேக் போனால் கோபப்படுவேன். ஆனால் செல்வராகவனுக்கு என்றால், மகிழ்ச்சியடைவேன். காரணம், அவர் என்னை அவரது படங்களில் அவ்வளவு டார்ச்சர் கொடுத்து வேலை வாங்கி இருக்கிறார். அதே டார்ச்சரை அவருக்கு செய்வதும், அதில் அவர் கஷ்டப்படுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. போயஸ் கார்டனில் நான் வீடு கட்டி இருப்பது இவ்வளவு பேச்சாக கிளம்பும் என்று தெரிந்திருந்தால், நான் அங்கு கட்டியிருக்கவே மாட்டேன். நான் யார் ரசிகன் என்று உங்களுக்குத் தெரியும்.

ரஜினி சார் வீடு போயஸ் கார்டனிலிருக்கிறது. என் 16 வயதில் போயஸ் கார்டனுக்கு சென்று ரஜினி சார் வீட்டை பார்க்க ஆசைப்பட்டேன். அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் கெஞ்சி போராடி அவர் வீட்டை பார்த்தேன். அதன் அருகிலேயே ஜெயலலிதாம்மா வீடும் இருந்தது. அதை மனதில் வைத்து கொண்டு போயஸ் கார்டனில், ஒரு சின்ன வீடாவது கட்ட வேண்டும் என கனவு கண்டேன். அந்த விதையானது அப்போது விழுந்தது. அந்த பதினாறு வயது வெங்கடேஷ் பிரபுவின் ஆசைக்கு, தனுஷ் கொடுத்த பரிசு தான், இப்போது போயஸ் கார்டனில் கட்டியுள்ள வீடு.

நான் யார் என்று அந்தச் சிவனுக்கு தெரியும். என் அம்மா, அப்பாவுக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் காலம் பதில் கூறும். என தனுஷ் பேசினார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here