வெளியிடுவதற்கு முன்பே கோடிகளில் வியாபாரமான பிளடி பெக்கர்.. மவுசு ஏறிய கவின், நெல்சன் கூட்டணி

0
113

Kavin: விஜய் தொலைக்காட்சியிலிருந்து வந்த நெல்சன் அடுத்தடுத்த படங்களின் மூலம் சூப்பர் ஸ்டாரை இயக்கும் லெவலுக்கு வளர்ந்தார். கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் 650 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

அதை அடுத்து எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்த நெல்சன் ஜெயலர் 2 ஸ்கிரிப்ட் எழுதுவதில் பிஸியாக இருக்கிறார். அதே சமயம் லோகேஷ் மாதிரி தயாரிப்பாளர் ஆகவும் உருவெடுத்து உள்ளார்.

அந்த வகையில் இவருடைய தயாரிப்பில் ஹீரோவாக கவின் நடிக்க இருக்கும் அறிவிப்பு அண்மையில் வெளியானது. இவரும் சிவகார்த்திகேயன் போல் விஜய் டிவியில் இருந்து வந்து கதாநாயகன் அந்தஸ்தை பெற்றுள்ளார்.

ரிலீசுக்கு தயாரான பிளடி பெக்கர்

லிப்ட், டாடா வரிசையில் அண்மையில் வெளியான ஸ்டார் படமும் இவருக்கு ஒரு அந்தஸ்தை ஏற்படுத்தியது. 12 கோடியில் உருவாக்கப்பட்ட அப்படம் 20 கோடி வரை வசூல் செய்து லாபம் கண்டது. அதை தொடர்ந்து இப்போது கவின் கைவசம் கிஸ், மாஸ்க் போன்ற படங்கள் இருக்கிறது.

மேலும் நெல்சன் கூட்டணியில் கவின் நடித்து வரும் ப்ளடி பெக்கர் செப்டம்பர் மாத முடிவில் திரைக்கு வர இருக்கிறது. விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அதன் தியேட்டர் உரிமம் 10 கோடிக்கு வியாபாரமாகி இருக்கிறது.

இந்த உரிமையை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பெற்றுள்ளது. இது தவிர சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளுக்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. ஆனால் இன்னும் அந்த விற்பனை முடியவில்லை.

இருப்பினும் நெல்சன் கவின் கூட்டணிக்கு இப்போது மவுசு கூடி இருக்கிறது. ஏற்கனவே இவர்களுடைய படம் குறித்த ப்ரோமோ வீடியோ வேற லெவலில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனாலேயே இப்போது இப்படத்தின் விற்பனையும் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளரான நெல்சனுக்கு லாபத்தை அளித்துள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here