நடிகை சவுந்தர்யா கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.
தமிழில் பொன்னுமணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். கார்த்திக் உடன் அந்த படத்தில் உள்ள நெஞ்சிக்குள்ளே பாடல் இன்று வரையில் பலராலும் ரசித்து கேட்கக்கூடிய பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. 1993 ஆம் வருடம் வெளியான பொன்னுமணி திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், ஏறத்தாழ அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வலம் வந்தார் சவுந்தர்யா.
நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் திகழ்ந்த சவுந்தர்யா, தமிழில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் என அப்போதைய உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தார்.

தவசி, சொக்கத்தங்கம் ஆகிய படங்கள் பட்டித் தொட்டி எல்லாம் பெரிதும் பேசப்பட்ட படமாக மாறியிருந்தது. அருணாச்சலம், படையப்பா போன்ற படங்களிலும் சவுந்தர்யா தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை ஈர்த்திருந்தார்.
1992-ல் ஆரம்பித்து 2003 வரை தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாக திகழ்ந்து வந்தார் சவுந்தர்யா. தனது நடிப்புத் திறமையால் பிரபலமடைந்த அதே நேரம், அந்த புகழை அரசியலிலும் நுழைய நினைத்திருந்தார் சவுந்தர்யா.
2004-ல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த சவுந்தர்யா, தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரிக்க தனது சகோதரர் செஸன்னா என்ற சிறிய ரக விமானத்தில் பெங்களூருவில் இருந்து கரீம் நகருக்கு சென்ற போது உண்டான விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக கோடிகளில் சம்பாதித்து வந்த பிரபல நடிகை சௌந்தர்யாவின் திடீர் மரணம், ரசிகர்கள் திரை பிரபலங்கள் என அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோடிகளில் சம்பாதித்த நடிகை சௌந்தர்யா மரணம் அடையும் போது அவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.200 கோடிக்கும் மேல் என்று சொல்லப்பட்டது.
அந்த 100 கோடி மதிப்புள்ள சொத்தை சௌந்தர்யாவின் தாயும், சௌந்தர்யாவின் கணவர் இருவரும் சரிவிகிதமாக பிரித்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here