பிரபாஸை லவ் பண்றாரா திஷா பதானி?.. திடீரென முளைத்த டாட்டூவால் இப்படி மாட்டிக்கிட்டாரே!

0
150

பாகுபலி படத்தின் போது பிரபாஸ் மற்றும் அனுஷ்கா கல்யாணம் செய்துக் கொள்ளப் போவதாக கிசுகிசுக்கள் அதிகமாக கிளம்பின. இதுவரை இருவரும் கல்யாணம் செய்துக் கொள்ளவே இல்லை. இந்நிலையில்,பிரபாஸை பாலிவுட் நடிகை திஷா பதானி காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் ஒரு டாட்டூ தான்.

பிரபுதேவாவை லவ் பண்ணிய போது நயன்தாரா அவரது பெயரை டாட்டூவாக குத்தியிருந்தார். அதன் பிறகு அதை பாசிட்டிவிட்டி என மாற்றிக் கொண்டார். இந்நிலையில், திஷா பதானி குத்தியிருக்கும் டாட்டூ பிரபாஸ் பெயரைத்தான் குறிப்பதாக சொல்கின்றனர்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக ரிலீசான கல்கி 2898 ஏடி படத்தில் சின்ன பகுதி என்றாலும் பிரபாஸுக்காக நடித்துக் கொடுத்திருந்தார் திஷா பதானி. இருவருக்கும் மத்தியில் வரும் ரொமான்டிக் பாடல் இத்தாலியில் ஷூட்டிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டா டக்கரா: சந்தோஷ் நாராயணன் இசையில் பிரபாஸ், திஷா பதானி இருவரும் காசி நகரிலிருந்து வேலைக்காக காம்ப்ளக்ஸ் இடத்துக்கு போகும் போது, வேலை பார்க்கவா வந்தோம். நகரத்தை சுற்றிப் பார்க்கலாம் என இருவரும் சுற்ற கிளம்பி ஒரு நிகழ்ச்சி ஒன்றில் ஷாம்பைன் எல்லாம் குடித்து கும்மாளம் போட்டு டான்ஸ் ஆடும் டா டக்கரா பாடல் வீடியோவை கல்கி 2898 ஏடி படக்குழுவினர் அண்மையில் வெளியிட்டனர். அந்த ஒரு பாடல் மற்றும் இன்னும் ஒரு காட்சியில் மட்டுமே திஷா பதானி நடித்திருப்பார்.

பிரபாஸை காதலிக்கிறாரா திஷா பதானி: பிரபாஸுடன் வெளிநாட்டில் திஷா பதானி டேட்டிங் செய்ததாக செய்திகள் கசிந்துள்ளன. மேலும், திஷா பதானி கையில் தற்போது புதிதாக இருக்கும் டாட்டூ பிரபாஸை அவர் லவ் செய்வதை உறுதி செய்கிறது என பாலிவுட் முதல் டோலிவுட் வரை பேச்சுக்கள் வந்தவாறு இருகின்றன.

திஷா டாட்டூ: கல்கி திரைப்படத்தில் பிரபாஸுக்கு இணையாக ராக்ஸி எனும் கதாபாத்திரத்தில் வாம்மா மின்னல் என்பது போல வந்து போவார். பிரபாஸுடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடற்கரையில் திடீரென ஆடையை அவர் கழட்டியதும் பிகினி தரிசனத்தை காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்ய போகிறார் என ஒரு செகண்ட் எல்லோரும் பயந்து விட்டனர். ஆனால், நாக் அஸ்வின் கொஞ்சம் டீசன்ட்டான நீச்சல் உடையை தந்து காப்பாற்றி விட்டார். இந்நிலையில், திஷா பதானி கையில் PD – என பிரபாஸ் மற்றும் திஷாவை குறிக்கும் டாட்டூ புதிதாக குத்தப்பட்டிருப்பது இடம்பெற்றுள்ளது. இது தான் இந்த காதல் கிசுகிசுவுக்கு முக்கிய காரணம் ஆகியிருக்கிறது.

அப்போ அலெக்ஸாண்டர்?: டைகர் ஷெராஃபை திஷா பதானி காதல் செய்வதாக பேச்சுக்கள் அடிபட்டன. அதன் பின்னர் நடிகை திஷா பதானி மாடல் நடிகர் அலெக்ஸாண்டருடன் டேட்டிங்கில் இருந்தார்.அப்போது மாடல் நடிகர் அலெக்ஸாண்டரை காதலிப்பதாக கூறினர். அலெக்ஸாண்டர் தனது கையில் திஷா பதானியின் உருவத்தையே டாட்டூவாக குத்தியிருந்தார். இந்நிலையில், அவருக்கும் டிமிக்கி கொடுத்து விட்டு பிரபாஸை காதலித்து வருகிறாரா திஷா பதானி என்கிற கேள்விகள் வந்துள்ளன.

கங்குவா ஹீரோயின்: கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் வந்து சென்றதை போல கங்குவா திரைப்படத்திலும் திஷா பதானி சின்ன கேரக்டரில் நடிக்காமல் இருக்க வேண்டும் என்றும் சிறுத்தை சிவா நாக் அஸ்வின் போல ஃபேன்ஸ்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டார் என்றும் நிச்சயமாக திஷா பதானியின் கிளாமர் ட்ரீட்டை வைத்திருப்பார் என எதிர்பார்க்கின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here